×

மும்பை எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு 77% அதிகரிப்பு: பணக்கார எம்.எல்.ஏ. மங்கள் பிரபாத் லோதாவின் சொத்து மதிப்பு ரூ.441 கோடி

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மும்பையை சேர்ந்த 29 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிடுகிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் கடந்த 2014ம் ஆண்டில் ₹577.66 கோடியாக இருந்தது. 2019ல் அவர்களின் சொத்த மதிப்பு ₹1,024.57 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 77 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதில் 5 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சொத்து மதிப்பு 200 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதை தெரியப்படுத்தியுள்ளனர். இதில் உச்சத்தில் இருப்பவர் பைகுலா எம்.எல்.ஏ. வாரிஸ் பதான் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு கடந்த 2014ல் இருந்த ₹3.06 கோடியில் இருந்து 2019ல் ₹15.80 கோடியாக அதிகரித்துள்ளது. மும்பையில் மொத்தம் 36 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 29 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிடுகிறார்கள். 6 பேருக்கு தேர்தல் டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது.
குர்லாவை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ. மங்கேஷ் குடல்கரின் சொத்து மதிப்பு 339 சதவீதம் அதிகரித்துள்ளது. இவருடைய சொத்துமதிப்பு 2014ல் ₹1.01 கோடியாக இருந்தது. 2019ல் ₹4.44 கோடியாக அதிகரித்துள்ளது. இவருக்கு அடுத்தபடியாக வர்சோவா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. டாக்டர் பார்தி லவேகர் சொத்து 267 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014ல் இவருடைய சொத்து மதிப்பு ₹1.56 கோடி. 2019ல் அது ₹5.73 கோடியாக அதிகரித்துள்ளது.

நான்காவது இடத்தில் இருப்பவர் மாகிம் தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. சதா சர்வாங்கர். இவருடைய சொத்து மதிப்பு 263 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2014ல் இவருடைய சொத்து மதிப்பு ₹7.06 கோடியாக இருந்தது. 2019ல் சொத்து மதிப்பு ₹25.63 கோடியாக அதிகரித்துள்ளது. மலபார் ஹில் பகுதியை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. மங்கள் பிரபாத் லோதாதான் மிகவும் பணக்கார எம்.எல்.ஏ. ஆவார். இவருடைய சொத்து மதிப்பு ₹441.64 கோடி ஆகும். கடந்த 2014ல் இவருடைய சொத்து மதிப்பு ₹198.61 கோடியாக இருந்தது. இப்போது 122 சதவீதம் அதிகரித்துள்ளது. இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் மான்கூர்டு தொகுதியை சேர்ந்த சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அபு ஆசிம் ஆஸ்மி ஆவார். இவருடைய சொத்து மதிப்பு ₹209.8 கோடி. மும்பாதேவி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் சொத்து மதிப்பு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2014ல் இவருடைய சொத்து மதிப்பு ₹37.22 கோடியாக இருந்தது. 2019ல் அது ₹44.65 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2014ல் மங்கள் பிரபாத் லோதாவின் சொத்து மதிப்பு ₹198.61 கோடியாக இருந்தது. இப்போது 122 சதவீதம் அதிகரித்துள்ளது.

Tags : Mangal Prabhat Lodha ,Mumbai , 77% increase ,assets , Mumbai MLAs Mangal Prabhat Lodha's,Rs 441 crore
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!