×

காட்டெருமையுடன் நடந்த சண்டையில் புலி உயிரிழப்பு: சந்திராப்பூர் வனப்பகுதியில் சம்பவம்

சந்திராப்பூர்: சந்திராப்பூரில் புலிக்கும் காட்டெருமைக்கும் இடையே நடந்த கடுமையான சண்டையில் இரண்டு வயது புலி ஒன்று உயிரிழந்துள்ளது. சந்திராப்பூர் மாவட்டம் ததோபா அதாரி புலிகள் சரணாலயத்தில் புலி ஒன்று உடல் கிழிக்கப்பட்டு இறந்து கிடந்தது. இறந்து கிடந்த புலிக்கு இரண்டு வயதுதான் இருக்கும். அதன் தாயிடமிருந்து பிரிந்து வந்த போது காட்டெருமை ஒன்றுடன் சண்டையிட்டு உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இறந்து கிடந்த புலி தனது எல்லையை உருவாக்கிக்கொண்ட போது காட்டெருமையுடன் சண்டையிட்டு பலத்த காயம் அடைந்தது. காயம் அடைந்த புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஆனால் கடந்த 4ம் தேதியில் இருந்து புலியை காணவில்லை. இந்நிலையில் நேற்றுக்காலை ததோபா வனப்பகுதியில் அதன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று இறந்து கிடந்த புலியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மகாராஷ்டிராவில் 6 புலிகள் சரணாலயம் இருக்கிறது.Tags : deaths ,Chandrapur forest ,Tiger ,forest battle ,incident , Tiger deaths ,forest battle, incident , Chandrapur forest
× RELATED டெல்லி நொய்டாவில் மருத்துவமனைகள்...