×

புசாவலில் பாஜக கவுன்சிலர், குடும்பத்தினர் சுட்டுக்கொலை: மர்ம நபர்கள் நள்ளிரவில் துணிகர சம்பவம்

ஜல்காவ்:  புசாவலில் நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பாஜக கவுன்சிலர் மற்றும் அவரது மகன்கள், சகோதரர், நண்பரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர். ஜல்காவ் மாவட்டம் புசாவல் நகரத்தில் உள்ள வீட்டில் அம்பேத்கர் நகரில் உள்ள தனது குடும்பத்தோடு வசித்து வந்தவர் பாஜக கவுன்சிலர் ரவீந்த்ர கராத் என்ற ஹம்ப்யா. நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தனது வீட்டில் மகன்கள் சுனில் கராத், பிரேம் சாகர், ரோகித் கராத் மற்றும் அவருடைய நண்பர் சுமீத் கஜ்ரே ஆகியோருடன் பேசிக்கொண்டனர்.இவரது வீட்டிற்கு 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் உள்ளே புகுந்தனர். உள்ளே சென்ற கொலையாளிகள் கவுன்சிலரையும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதுடன் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த குடும்ப உறுப்பினர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

கொலையாளிகள் அங்கிருந்து தாங்கள் பயன்படுத்திய வாகனத்தில் ஏறி தப்பியோடி விட்டனர். இதனிடையே   துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக் காரர்கள் கவுன்சிலரையும், அவரது குடும்பத்தினரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், கவுன்சிலருக்கு தீவிர சிகிச் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.துப்பாக்கி சூட்டில் கவுன்சிலர் ரவிந்திர பாபுராவ் கராத் (50), அவருடைய சகோதரர் சுனில் பாபுராவ் கராத் (55), சாகர் ரவீந்திர கராத் (20), ரோகித் என்ற சோனு ரவீந்திர கராத் (20) மற்றும் இவருடைய நண்பர் சுமீத் ஆகியோர் உயிரிழந்தனர். இப்படுகொலை குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தடய வியல் நிபுணர்கள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில், இந்த சம்பவம் நடைப்பெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நகர போலீசார் இக்கொலையில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கும் 3 நபர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அரசியல் முன் விரோததால் படுகொலை செய்யப்பட்டனரா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கொலை செய்யப்பட்டனரா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.



Tags : councilor ,BJP ,Pusawal ,persons , BJP councilor, family ,shot dead , Pusawal
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அமமுக...