×

புறநகர் மும்பையில் சேவை நாயகனாக வலம் வரும் முத்துராஜன் பழனி: ரேவதி சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர்

ராஜன் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல சமூக சேவகர் மற்றும் மக்களின் மத்தியில் இளம் புயலாக வளம் வரும் முத்துராஜன் பழனி ஒரு சாதாரண ஏழை தமிழ் குடும்பத்தில் இராஜம்மாள் மற்றும் பழனி மூக்கையாவுக்கு 4வதாக பிறந்தவர். இவருடைய தாத்தா மூக்கையா 1952-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத் தில் செண்பாகரமநல்லூர் என்ற கிராமத்திலிருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்தார். பி.எஸ்.சி, எம்.பி.ஏ . முடித்துள்ள ராஜன் தற்போது எல்.எல்.பி படித்து வருகிறார்.இவரது துணைவியார் கமலசிந்து அனுமின் நிலையத்தில் ஒரு பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மகன் ஆர். மாதவன், மகள் அபிநிதி ஆகியோர் உள்ளனர்.இவருடன் பிறந்த மூன்று அக்கா அனைவரும் மும்பை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் முடி த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுனர், தாயார் இல்லத்தரசி ஆவார்.

இவர் தனது கல்லூரி படிப்பின்போது பயிற்சிகூடம் ஒன்றை வீட்டிலேயே தொடங்கி பல ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்து வந்தார். பணம் இருப்பவர்களிடம் குறைந்த கட்டணம் வாங்கி கொண்டு பாடம் நடத்தி வந்துள்ளார். சமூக சேவையில் மிகுதியான ஆர்வம் கொண்டதால் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கல்வியின் சேவையை 15 ஆண்டு காலம் முடித்த இவர் 1998-ம் ஆண்டு முதல் மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்ய தொடங்கினார். 2010-ம் ஆண்டு தனது சகோதரியான ரேவதி மார்பு புற்றுநோயால் இறந்த காரணத்தினால் அந்த இழப்பையும், வலியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அதே வருடம் தனது மனைவி கமலசிந்துவுடன் இணைந்து, ’ரேவதி சாரிட்டபிள் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்தார்.இந்த அறக்கட்டளை மூல மாக சுமார் 10 வருடங்களாக தொண்டு செய்து வருகிறார். இந்த அறக்கட்டளை பெண்கள் மற்றும் பெண் சிசுக்களின் கல்வி மருத்துவம் மற்றும் பல விழிப்புணர்களை செய்து வருகிறது.
மும்பையிலுள்ள குடிசை வாழ்மக்களின் நலனில் மிக அக்கறை கொண்ட இவர், அவ்வப்போது மருத்துவ முகாம், கல்வி மற்றும் தொழிலுக்கான வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். கடவுள் நம்பிக்கை, நேர்மை மற்றும் தனது உழைப்பி ன்மீது அபார நம்பிக்கைக் கொண்ட ராஜன் பழனி சேவை மற்றும் கடின உழைப்பை பாராட்டி இவரை மகாராஷ்டிரா மாநில ‘ஐயப்பா சேவா சமாஜம்’த்தின் நிர்வாக செயலாளர் பொறுப்பையும் ஒப்படைத்துள்ளது.
 இவர் தனது சொந்த முதலீட்டில் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் இணைந்து ரேவதி சாரிட்டபிள் டிரஸ்ட் ஆரம்பித்து சேவையாற்றி வருகிறார்.
எளிமையான தோற்றம், கருணை நிறைந்தவர். தாராள மனம் கொண்டவர். மக்களுக்காக சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவர். கல்வியில் மட்டுமின்றி இவர் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளிலும் மகாராஷ்டிரா மாநிலத்தை 1994ம் ஆண்டு பங்கு பெற்று பெருமை சேர்த்திருக்கிறார். கல்லூரியில் நடக்கும் பல தேர்தலிலும் தனது தலைமை தரத்தை நிரூபித்துள்ளார்.

 சமத்துவ விழுதை மக்களின் மனதில் விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த ஒரு வேறுபாடின்றி தன்னால் இயன்ற தொண்டுகளை செய்து வருகிறார். இளம் புயலாக சேவையாற்றும் ராஜன் பழனி செம்பூர்,திலக்நகர், மான்கூர்டு மற்றும் சிவாஜி நகர் பகுதிகளில் சேவை நாயகனாக கடந்த 10 வருடங்களுக்கு மேல் வலம் வருகிறார். எண்ணற்ற உதவிகளை எதையும் எண்ணாமல் செய்யும் இவர் மக்களின் அடிப்படை வசதியை கருத்தில் கொண்டு சமூக வலைதளங்களான ’ஃபேஸ்புக்’ மற்றும் ட்விட்டர் போன்ற வலை தளங்களில் பதிவிட்டு அதற்கான தீர்வையும் கண்டுள்ளார்.
கல்வி, மருத்துவம் மற்றும் சாலைகள் சீரமைப்பு போன்ற பல பிரச்சனைகளை மாநகரா ட்சி அலுவலகத் தில் அடிக் கடி தொடர்பு கொண்டு மக்களின் பிரச்னைகளை தீர்த்து வருகிறார்.மக்களின் நலம் விரும்பி யான ராஜன் பழனி சேவை அரசியலிலும் தொடர வேண்டு மென்பது அனைவரின் எதிர்பார் ப்பாக இருக்கிறது. இந்து குடும்பத்தில் பிறந்தி ருந்தாலும் எம்மதமும் சம்மதம் என்ற எண்ணம் கொண்டதினால், தன்னால் இயன்ற உதவிகளை கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய சகோத ரர்களுக்கு அவ்வப்போது செய்து வருகிறார்.ராஜன் பழனியின் சேவை மக்களுக்கு என்றென்றும் தேவை என்பது மக்களின் விருப்பமாக இருக்கிறது.


Tags : Founder ,Revathi Charitable Trust , Muthurajan Palani, Revathi, Charitable Trust Founder
× RELATED பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய...