×

எதிர்காலத்தில் இந்தியா மின் மிகை நாடாக திகழும்: நிர்வாக இயக்குனர் பாலகிருஷ்ணன்: எச்.எம்.டி.டி

இன்ஜினியரிங் பிரைவேட் லிமிட்டெடு நிறுவனத்தின் அசாத்தியமான கண்டுபிடிப்பு 130 கோடி கொண்ட இந்திய மக்களுக்கு மின்சாரம் அளிப்பதற்பாக பல அரசு சார்பு நிறுவனங்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பல நிறுவனங்கள் தங்களது கண்டுபிடிப்புகளை மத்திய அரசுக்கு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழரின் கடுமையான உழைப்பால் உயர்ந்து நிற்கும் ஒரு நிறுவனம் மாபெரும் கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் கடல் அலையில் இருந்து மின்சார சக்தியை எடுத்து இந்தியா மின் மிகை நாடாக திகழும் என்று அதன் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவர் நெல்லை மண்ணுக்கு சொந்தக்காரர். இந்திய இரயில்வேதுறைக்கு பல தளவாடங்களை தயாரித்து கொடுத்து வருகிறார். இவருடைய நிறுவனம் கண்டுபிடித்துள்ள பல பொருட்கள் இந்திய அரசும், இந்திய மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மருக் காலன் குளத்தை சேர்ந்தவர் பால கிருஷ்ணன். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களான அப்பா சங்கரன், அம்மா லெட்சுமி சாதாரணமான தொழிலாளர்கள். பாலகிருஷ்ணன் உடன்பிறந்தவர்கள் 5 பேர். அனைவரும் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.’படிப்பதே முதல் இலட்சியம்’ என்ற குறிக்கோளோடு தனது கிராம பின்னர் பள்ளியிலும், நகர மேல்நிலை பள்ளியிலும் படித்து வந்தார். ஒரு புறம் பணம் இல்லாமல் அவதிப்பட்டு கொண்டு இருந்தாலும், மறுபுறத்தில் படித்து பட்டம் பெற வேண்டும் என்ற வேட்கை அவரிடம் இருந்தது.
12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்ததால் அவருக்கு (பி.இ) தியாகராஜர் இன்ஜினியரிங் வாய்ப்பு கிட்டியது. இதனையடுத்து தனது தந்தையிடம் உயர்கல்வி தொடர்பாக விவாதித்தார். ”நம்மிடம் பணம் இல்லையே என்ன செய்வது” என்று யோசித்தபோதே “நான் உயர் கல்வி படிக்கிறேன். அதே வேளையில் பகுதி நேர அடிப்படையில் வேலை செய்து படிப்புக்கான செலவையும் பார்த்துக் கொள்கிறேன்” என கூறியதும், தந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. பி.இ எலக்ட் ரானிக்ஸ் மதுரையில் முடித்தார். பள்ளிப்படிப்பை புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியிலும், அதன்பின் புனித யோவான் கல்லூரி பாளை யங்கோட்டையில் படிப்பை முடித்தார்.

பொருளாதார நெருக்கடியிலும் மிகவும் கஷ்டப்பட்டு பி.இ படித்து முடித்தார். அதன்பின்னர் பம்பாய் ஐ.ஐ.டியில் சேர்ந்து எம்.டெக் படித்தார். பி.எச்.டி படித்து முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.இதனிடையே சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐந்து வருடம் ஆராய்ச்சி இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு பொருட்கள் பல நிறுவனங்களை வெகுவாக ஈர்த்தது.
சென்னையில் வேலையிலிருந்து விலகி கொல்கத்தா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு 5 வருடம் பணியாற்றிவிட்டு மும்பை புறப்பட்டு வந்த அவர், 1982-ல் மும்பையை அடுத்த தானே வாக்ளே எஸ்டேட்டில் சொந்தமாக தொழில் தொடங்கினார். தன்னுடைய வடிவமைப்பு பொருட்களுக்கு மேலும், மேலும் ஆர்டர் கிடைத்தது. இதனையடுத்து நிறுவனத்தை விரிவு செய்தார்தற்போது நிறுவனத்தில் 4 இயக்குனர்கள் உள்ளனர். அதில் பாலகிருஷ்ணன், அவருடைய மனைவி திருமதி திலகம், நண்பர் முனீஷ் அகர்வால் மற்றும் பர்வீன் அகர்வால் ஆகியோரும் இயக்குனர்களாக உள்ளனர்.அவர்கள் நிதி தொடர்பான வேலை களை பார்த்துக் கொள்வார்கள். மற்ற வேலைகளான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு வேலைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.

இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக அளவில் பேசப்படு கின்றன. தற்போது டார்பிடோ இயந்திரத்திற்கு மோட்டாரும், அதற்குத் முதன்மையான மின்னணு இயந்திரமும் நாங்கள் தயாரித்த ஒரு பொருளை இந்திய நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.கடல் அலையிலிருந்து மின்சாரம் எடுப்பது தொடர்பான ஆராய்ச்சி மத்திய அரசின் ஒரு முக்கிய நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த கண்டுபிடிப்பு விரை வில் வெற்றியடையும். இதன்மூலம் நம்நாட்டுக்கு தேவையான மின் உற்பத்தியை தயாரிக்கலாம். எதிர்கா லத்தில் இந்தியா மின்மிகை நாடாக திகழும் என்பதில் ஐயமில்லை.அந்த இயந்திரம் வெற்றியடை ந்தால் அதனை நாங்கள் வடிவமைத்து கொடுப்பது மட்டுமல்லாமல் அதனை நிறுவி கொடுப்போம்.இந்த திட்டம் இந்தியாவில் நடைமுறை படுத்தினால் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.மேலும் எங்கள் நிறுவனம் உலக நாடுகளுக்கு பல பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

மேலும். பாலகிருஷ்ணன் கூறுகையில்…நாங்க படித்த காலத்தில் கம்ப்யூட்டர் எதுவும் கிடையாது. கஷ்டப்பட்டு படித்தோம். படித்து முடித்தவுடன் அதிக பயிற்சி எடுத்துக் கொண்டோம். மேலும், படிப்புக்காக பல சிரமங்களை அனுபவித்து உள்ளேன்.அதுபோன்று மாணவர்கள் தங்கள் அடிப்படை இலக்குகளை புரிந்து கொண்டு உழைத்தால்தான் வெற்றியை ருசிக்க முடியும்.எனக்கு பேராசிரியர் சுப்பாராவ் அதிகளவில் உதவி செய்தார். ஐ.ஐ.டியில் எம்.டெக் படிக்க முழு ஒத்துழைப்பு அளித்தார். பகுதி நேர வேலையை வாங்கிக் கொடுத்தார். மேலும்நல்ல அறிவுரை வழங்கி வாழ்க்கைக்கு முக்கியமான தனது படிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.ஒரு காலக்கட்டத்தில் வாசி தமிழ்ச் சங்கம் தலைவராக 10 ஆண்டுகள் இருந்து மக்களுக்கு பணியாற்றினேன். ஆனால், எனக்கு வேலை பளு அதிகமாக இருந்ததால் சமூகப்பணியை தொடர்ந்து செய்ய முடியவில்லை.1976ம் ஆண்டு திருப்பரங்குன்றத் தில் வைத்து எனக்கு திருமணம் நடைப்பெற்றது. என்னுடைய மனைவி திருமதி திலகம் தொழிலுக்கு உதவியாக இருந்தது மட்டுமல்லாமல் நான் நஷ்டமடைந்த காலத்தில் என்னுடைய மனைவிதான் எனக்கு ஆதரவாக இருந்து ஊக்கமளித்தது மட்டுமல்லாமல், அவர் அணிந்திருந்த நகையை கொடுத்து தொழிலை மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று கூறினார். அவர் அளித்த ஊக்கத்தால் இன்று நிறுவனம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

மேலும், எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பி.இ, எம்.எஸ், எம்.பி.ஏ படித்து உள்ளனர். மூத்த மகள் தீபா பாலகிருஷ்ணன். இவர் சரத்சந்த் என்பவருடன் திருமணம் செய்துக் கொண்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு சவீதா, திவ்யா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
இரண்டாவது மகள் ரூபா பாலகிருஷ்ணன்  பி.இ எம்.பி.ஏ முடித்துவிட்டு எங்களோடு இணைந்து நிறுவனத்தை பார்த்து வருகிறார். இவருக்கு
பியூஷ் என்ற மகனும் உள்ளார். பியூஸ் எங்களுக்கு செல்லப்பிள்ளை நல்ல ஒரு டான்சர். டெல்லி பப்ளிக் பள்ளியில் படித்து வருகிறார்.
தினமும் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து பணிகளை செய்ய தொடங்கி விடுவேன். அதன்பின்னர் நடைபயிற்சி, 6 மணிக்கு டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகிறேன். இதன்மூலம் தினசரி உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன் உடலையும் கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.நல்லா உயர்ந்த நிலையில் இருக்கிறீர்களே ஏன் கிராமத்திற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்பீர்கள்…நானும் நெல்லை அருகே 150 ஏக்கர் விவசாய நிலங்களை வாங்கி அதில் விவசாயம் செய்து நல்ல மகசூல் செய்தேன். இதற்காக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த அதிகாரிகளையும் வரவழைத்திருந்தேன். ஆனால், அப்பகுதியில் பல இடையூறுகள், விளை நிலங்களை நாசப்படுத்துதல், தானியங்களை திருட்டு போன்ற பல்வேறு சம்பவங்கள் நடைப்பெற்றது. இவ்வாறு அடிக்கடி நடந்து வந்ததால், என்னுடைய ஆய்வுப் பணி தடைப்பட்டது. இதனையடுத்து அந்த நிலங்களை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. என தெரிவித்தார்.

தொடர்ந்து ஆராய்ச்சி பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அவர், அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்கள் மட்டுமின்றி காலத்திற்கு ஏற்றவாறு தங்களது அறிவை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.எங்கள் அப்பா கடின உழைப்பாளி, இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைக்க கூடியவர். இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது. அவரைப் போன்று நாங்களும் உழைக்க முயற்சித்து வருகிறோம். நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்த போதிலும் தனது விடா முயற்சியால் மீண்டும் நிறுவனத்தை கட்டி எழுப்பியுள்ளார். அப்பா உருவாக்கிய நிறுவனத்தை சிறப்பாக நடத்த முயற்சிப்போம். மேலும் எங்கள் அப்பாவிடமிருந்து நிறை விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறோம் என ரூபா பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.நான் அமெரிக்காவில் தங்கியிருந்தாலும் அப்பாவை போன்று சமூகப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். அங்கு தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். மேலும், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவள். அப்பாவை போன்று கடினமாக உழைப்பது என்பது நினைத்து பார்க்கவே முடியவில்லை. மும்பையில் சகோதரி நிறுவனத்தை பார்த்துக் கொள்வார் தீபா பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags : Balakrishnan ,India ,powerhouse ,HMTT India , India, powerhouse, future,Managing Director Balakrishnan, HMTT
× RELATED வயலில் இரைதேடும் பறவைகள் வங்கிகளில் சந்தேகப்படும்படி