×

நண்பர் கொடுத்த ஊக்கத்தால் தொழிலில் சிறந்து விளங்குகிறேன்: கார்த்திக்கேயன்

தூத்துக்குடி மாவட்டம் நாதன்கிணறு பள்ளிபத்து கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்கேயன். இவர் தாராவி டிரான்ஸ்சிட் கேம்ப் 13-ல் கார்த்திக் நாராயண விலாஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.செல்லத்துரை - உத்திரபுஸ்பம் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த இவர், 10ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு 1989ம் ஆண்டு மும்பை வந்தார். மும்பையை அடுத்த வசாய் பகுதியில் தங்கியிருந்த அவர், சரியான வேலை எதுவும் அமையாததால் தாராவிப் பகுதிக்கு வந்தார்.தாராவி கிராஸ் ரோட்டில் உள்ள கடலை வறுக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடம் பணியாற்றினார்.
அவருடைய நண்பர் வனராஜா என்பவரும் அப்பகுதியில் தொழில் செய்து வந்தார். (வனராஜா அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து திரைப்படத்துறையில் தயாரிப்பாளர் ஆனார். அவர் காமராஜ் உள்ளிட்ட 3 படங்களை தயாரித்து வெளியிட்டவர்.)

பணியிலிருந்து விலகிய கார்த்திக்கேயன் தனது நண்பர் வனராஜாவின் ஆலோசனையின் பெயரில் பொருட்களை மொத்தமாக வாங்கி அதனை மிதிவண்டியில் எடுத்துச் சென்று கடை, கடையாய் வினியோகித்து வந்தார். நாளவில் பணம் புரள ஆரம்பித்தது. இதனையடுத்து
1993-ல் ஒரு சிறிய கடையை தொடங்கினார்.மிச்சர், கடலை பருப்பு, உள்ளிட்ட பல வகையான நொறுக்கு தீனி மற்றும் தின்பண்டங்களை தரமாக தயாரித்து வியாபாரம் செய்து வந்தார். காலை மாலை இரவு என்று பாராமல் கடுமையாக உழைத்து கார்த்திக் நாராயண விலாஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். முறையாக உரிமம்  பெற்று நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இவருக்கு மனைவியும், மகளும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.கார்த்திக் நாராயண விலாஸ் உரிமையாளர் கார்த்திக்கேயன் கூறுகையில், ”தனது நண்பர் வனராஜா அவர்கள் மிக்ஸர் உள்ளிட்ட தின்பண்டங்களை  கொடுத்து மார்க்கெட்டிங் செய்ய வைத்தது மட்டுமல்லாமல் என்னை தொழிலதிபராக ஆக்குவதற்கு ஊக்கம் அளித்தார். எங்கள் நிறுவனத்தில் தரமான எண்ணெயை பயன்படுத்தி வருகிறோம். தென்னக மணம் கொண்ட பொருட்களை வட இந்தியர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு ஏற்றவாறும் பர்ஷான் பொருட்களை தயாரித்துக் கொடுத்து வருகின்றோம்.” என கூறினார்.

Tags : Karthikeyan , I am getting better,business , encouragement of a friend,Karthikeyan
× RELATED இயக்குநர் சங்கரின் மகள் திருமண...