×

இராமகிரி மலையில் ராம தசா ஆசிரமத்தை எழுப்பி பழங்குடியின மக்களுக்கு சேவையாற்றி வரும் கிருஷ்ணாநந்தா சரஸ்வதி சுவாமிகள்

ராம தசா ஆசிரமம் பத்லாபூர் மேற்கிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அம்பிஷிவ் கிராமத்தின் அருகே உள்ள ராமகிரி மலையை ஒட்டி பார்வி நதிகரையோரம் அமைந்துள்ளது. 60 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த ஆசிரமத்தில் செடி, கொடி, மரங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. நிசப்தமாக உள்ள இந்த ஆசிரமத்தில் கோசாலை, நட்சத்திர பூங்கா மற்றும் பல மரங்கள் உள்ளன. அந்த ஆசிரமத்தை சுற்றி 300க்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு  ஆஞ்சநேயர் கோவில் மலைப்பகுதியிலும், சிவன் கோவில் நதிகரை ஓரத்திலும் அமைந்துள்ளது. கோவிலின் அருகே நதி இருப்ப தால் பொதுமக்கள் தோஷங்களை கழிப்பதற்காக அமாவாசை நாளன்று கூடுவார்கள்.  ராம தசா  ஆசிரமத்தை உருவாக்கியவர் ஆன்மீக சொற்பொழிவாளர் சுவாமி கிருஷ்ணாநந்தா சரஸ்வதி சுவாமிகள்.

இவர் கேரள மாநிலம் திருவ னந் தபுரத்தில் உள்ள ஆசிரமத்தில் தன்னுடைய குருநாதர் ஜகத்குரு சுவாமி சத்யானநந்தா மகாராஜ் அவர்களிடம் சிஷ்யனாக பணிவிடை செய்து வந்தார்.இவர் ஒரு நாள் கனவு கண்டார். கனவில் ராமபிரானின் கால் பதித்த புனிதமான மலைப்பகுதி ஒன்று உள்ளது. அந்த இடத்தை தேடி நீ செல்ல வேண்டும். அந்த இடமும் கனவில் வந்து சென்றது.இதனை தன்னுடைய குருநா தரிடம் தெரிவித்து இருக்கிறார்.
”நீ யாரிடமும் கை நீட்டி பணம் எதுவும் வாங்கக் கூடாது. தாராளமாக அந்த இத்தை தேடி கண்டுப்பிடித்து இறைப்பணி ஆற்றவும் என உத்தரவு பிறப்பித்தார். அப்போது அவரிடம் வெறும் 23 ரூபாய்தான் இருந்தது. ராமபிரான் கால் பதித்த இடத்தை தேடி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் பத்லாபூரிலிருந்து 12 தொலைவில் உள்ள அம்பிஷிவ் என்னுமிடத்திற்கு வந்தார்.  தன் கனவில் வந்து சென்ற மலை தன் அருகில் இருப்பதை உணர்ந்தார்.அதன்பின்னர்தான் ராமகிரி மலைக்கு சென்றார். பின்னர் அதன் அருகே உள்ள பார்வி நதிக்கு நன்னீரை கொண்டு வந்து லலிதா சகஸ்ராணம் அர்ச்சனை செய்தார்.

அந்த இடத்தின் உரிமையாள ரிடம் இது ராமபிரான் ஆஞ்சனேயர் கால் பதித்த இடம். இந்த இடத்தை புனிதமாக்க வேண்டும் என்பதை அவரிடம் தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட உரிமையாளரிடம் சுவாமி அவர்கள் ஒரு ரூபாயை வழங்கினார். இடத்திற்கு உண்டான மீதி பணத்தை ஒரு வருடத்திற்குள் செலுத்தி விடுகிறேன் என கூறினார். அதுவரை தன்னந்தனி காட்டுப்பகுதியில் தினம், தினம் ராமபிரான் நாமத்தோடு வசித்து வந்தார். இந்த சூழலில் 1981-ம் ஆண்டு ஆசிரம இடத்திற்கான நிதியை திரட்டுவதற்காக மும்பையில் உள்ள சண்முகா னந்தா கலையரங்கில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் மூலம் கிடைத்தப் பணத்தை இட உரிமையாளருக்கு செலுத்தினார்.ஆசிரமத்தில் இராமர், லெட்சுமணன், சீதா ஆஞ்சனேயர் மற்றும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தினமும் பூஜை செய்து வழிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் தியானம் செய்வதற்காக தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு பள்ளிக்கூடம் கட்டப் பட்டு உள்ளது. சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தொடர்ந்து படிப்பா ற்றலை வளர்த்து வருவதுடன், தொடர்ந்து சொற்பொழிவாற்றி வருகிறார்.ஆசிரமத்தில் தினமும் யாகம், லலிதா சகஸ்ராணம் அர்ச்சனையும், கற்பூர ஆரத்தி மற்றும் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆற்றங்கரையில் பூசாரிகள் மூலமாக பித்ரு பூஜை, சிவ பூஜை நடத்தப்பட்டு வருகின்றன.கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கும், அப்பகுதியில் வசித்துவரும் பழங்குடியின மக்களுக்கும் அன்றாடம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரமத்தின் சார்பில் திருமண தகவல் மையம் தொடங்கப் பட்டுள்ளது. வரதட்சனை ஏதுமின்றி திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இங்கு வாழ்வோர் வழமையாக ஆன்மீக மற்றும் உடல் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். சில மாணாக்கர்களுக்கு தங்கி படிக்கும் பாடசாலையாகவும் விளங்குகின்றன.

பழங்குடியின மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் ஆடைகள் வழங்கி வருகின்றனர். ஆசிரமத்தில் வைத்தியசாலை உள்ளது. இந்த வைத்திய சாலை மூலம், ஆசிரமத்தின் நிர்வாகிகள் சுற்றுபுற கிராமங்களுக்கு சென்று இலவச மருத்துவ பரிசோதனைகளை நடத்தி அவர்களுக்கு ஆலோ சனைகளையும், மருந்துகளையும் வழங்கி வருகின்றனர். குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.  இங்கு வசித்து வரும் மக்களுக்கு அரசிடமிருந்து பல உரிமைகளை கொடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த ஆசிரமத்தின் மூலம் ராம ராஜ்யம் எனப்படும் ரதயாத்திரை உருவாக்கப்பட்டு இந்தியா முழுவதும் பவனி வந்தது. 523 அடி உயரம் கொண்ட ஹனு மான் சிலை அமைக் கப்பட உள்ளது. இரண்டு மலைகளுக்கு இடையே அணை கட்டப்படவிருக்கிறது. இராமாயணம் தீம் பார்க், இலவச மருத்துவமனை உள்ளிட்டவைகள் கட்டப்பட விருக்கிறது.தமிழை சரியாக பேசுகிறேனா என்பதை நிமிடத்திற்கு கேட்டுக் கொண்ட சுவாமி அவர்கள், இறுதியில் தன் தாய்மொழிக்கு தாய்மொழியான தமிழை எப்படி தவறாக பேசுவேன் என்று கேள்வி எழுப்பினார்.

Tags : Krishnananda Saraswati Swamis ,Mount Ramagiri ,Rama Dasa , Krishnananda,Saraswathi Swamis, set , Rama Dasa Ashram at Ramagiri Hill
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!