திருநெல்வேலி மாவட்டம் கண்டிதான்குளத்தை சேர்ந்த கே.ஜோசுவா மற்றும் ஜெயின் ஜோசுவா தம்பதியருக்கு 2 பிள்ளைகள். இதில் மூத்த மகனாக பிறந்தவர் கிங்ஸ்லைன் ஜோசுவா. இவர் தானே வாக்ளே எஸ்டேட் சாந்தி நகரில் வசித்து வருகிறார். தன்னுடைய தொடக்கப்பள்ளியை தானே லிட்டில் ப்ளாவர் ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர் கல்லூரி படிப்பை சயானில் உள்ள எஸ்.ஐ.இ.எஸ் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்து வந்தார். அதன்பிறகு முதுகலை வணிகவியல் மும்பை பல்கலைகழகத்திலும் மற்றும் பி.எட். படித்தார். படிப்பில் அதிக ஆர்வமுள்ள கிங்ஸ்லைன் ஒவ்வொரு வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சிபெற்றுள்ளார். வகுப்பில் நேரம் கிடைக்கும்போது, நண்பர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். கிங்ஸ்லைன் படித்து கொண்டு இருக்கும் கால கட்டத்தில் கல்லூரி முடிந்து வீடு திரும்பியதும், மாலை நேரங்களில் தனது டியூசன் வகுப்பு எடுத்து வந்தார். மாணவர்களுக்கு எளிமையாக முறையில் பாடத்தை நடத்தும் ஆற்றல் படைத்தவர்.
பல்வேறு தனியார் வகுப்புகளில் அக்கவுண்டன்ஸி சொல்லி கொடுத்து பல மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைத்துள்ளார். பல்வேறு தனியார் வகுப்பில் பாடம் நடத்தி வந்த இவருக்கு சொந்தமாக கிளாஸஸ் தொடங்க நாட்டம் இருந்தது.ஜோசுவா கிங்ஸ் அகடமி என்ற பெயரில் 1995 ஆம் ஆண்டு டியூசன் கிளாஸஸ் தொடங்கினார். ஆரம்ப காலக்கட்டத்தில் 11 வகுப்பை சேர்ந்த வணிகவியல் மாணவர் ஒருவர் மட்டுமே வந்து சேர்ந்தார்.
அதனை கவலைப்படாத கிங்ஸ்லைன் ஜோசுவா அந்த மாணவரை திறமை யானவராக மாற்ற முடிவு செய்து அதற்கேற்றவாறு கற்று கொடுத்தார். இவர் சிறப்பாக கற்றுக் கொடு த்ததால் மாணவர் அனை த்து பாடத்திலும் அதிக பதிப்பெண் எடுத்து தேர்ச்சிப்பெற்றார்.இதுகுறித்து அப்பகுதி வாசிகளுக்கு தெரிய வரவே, அடுத்த வருடத்திலிருந்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. படிப்படியாக வளர்ந்த வந்த கிங்ஸ் அகடமியில் திறமையான ஆசிரியர்களையும் நியமித்துள்ளனர். அவர்களும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடம் நடத்தி வருகின்றனர். இன்று கிங்ஸ் அகடமி தானே நகரில் பிரபலமாக திகழ்ந்து வருகிறது.
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்ததால். ஒவ்வொரு பாடத்திற்கும் திறமையான ஆசிரியர்களை பணிக்கு அமர வைத்து அவர்கள் மூலமாக திறன் பட கல்வி கற்று கொடுத்து வருகிறார்.இங்கு படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அதுவும் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று வருகின்றனர்.11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பாடம் கற்று கொடுத்து வந்தார். பின்னர் பிகாம், பி.காம், பேஃப், பிஎம்எஸ் போன்ற பிரிவில் உள்ள மாணவர்களுக்கும் கற்று கொடுத்து வருகின்றனர்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இல்லாத மாணவர்களுக்கு இலவசமாகவும் மற்றும் குறைந்த விலையில் கட்டணம் வாங்கி, பாடங்களை நடத்தி வருகிறார். முலுண்ட் கிழக்கு ஹோலி ஏஞ்சல் பள்ளியிலும் அக்கவுண்ட்டன்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இயேசுவின் கிருபை தான் தன்னை இந்த உயர்வான இடத்திற்கு கொண்டு வந்தததற்கான காரணம் ஆகவே கடவுள் கிருபை இருந்தால் நாம் நமது தொழிலில் வெற்றி பெறலாம் என்கிறார் ஆசிரியர் கிங்ஸ்லைன் ஜோசுவா.