×

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ‘பப்ளி அண்ட் பண்டி’ நொறுக்கு தீனிகள்

கடுமையான உழைப்பால் தனி முத்திரை பதித்துள்ள பப்ளி ப்ரொடெக்ஸ் நிறுவனம். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயாமொழி என்னும் ஊரை சேர்ந்தவர் வனசேகர். இவர் புனே மாவட்டத்தில் ஹவேலி என்னுமிடத்தில் பப்ளி ஃபுட் ப்ரொட க்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். இவரது தந்தை தங்கதுரை திருச்சியில் வியாபாரம் செய்து வந்த காலக்கட்டத்தில் வனசேகர் மற்றும் அவரது தந்தை, அண்ணன், தம்பி, தங்கை, அம்மா ராசாத்தி அம்மாள் உள்ளிட்டோர் அங்கு தங்கியிருந்தனர். திருச்சியில் 8ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் புனே நகருக்கு பயணமானார்.அங்கு தனது மாமா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்ததால் தனது மாமாவிடம் தெரிவித்திருக்கிறார்.ஆனால், ”அவரோ நான் எப்படி உழைத்து முன்னேறினோ அதுபோன்று நீயும் நல்ல உழைத்து முன்னுக்கு வர வேண்டும்” என்று கூறினார். இதனையடுத்து வனசேகர் சொந்தமாக தொழிலை தொடங்கினார். அப்பளம், மிக்சர் உள்ளிட்ட நொறுக்கு தீனிகளை தரமான எண்ணெயுடன், சுத்தமான பொருட்களை சேர்த்து திருச்செந்தூர் மணத்துடன் செய்யத் தொடங்கினார்.

நொறுக்கு தீனிகளின் ருஷி மக்களுக்கு பிடித்து போனதால் அனைவரும் வாங்கி சாப்பிட ஆரம்பித்தனர். இதனையடுத்து புனே உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று மார்க்கெட்டிங் செய்தார். இந்த சூழலில் மாமா வேறு தொழிலுக்கு செல்ல, அந்த நிறுவனத்தை தான் எடுத்து நடத்த முன் வந்தார். தொடர்ந்து வெற்றிக்கரமாக நடத்தி வந்த நிலையில், உள்ளூர் பிரமுகர்கள் குடைச்சல் கொடுத்தனர். அதனை வெற்றிக்கரமாக முறியடித்த அவர், தொடர்ந்து அப்பகுதியில் தொழிலை திறம்பட நடத்தி வருகிறார்.தனக்கென தனி முத்திரை (பப்ளி அவுர் பண்டி) உருவாக்கியுள்ளார். பொருளின் தரத்தால் புனே மட்டுமின்றி மகாராஷ்டிராவில் பல இடங்களுக்கு தன் நிறுவன பொருட்களை வினியோகித்து வருகிறார். வனசேகருக்கு 2004-ம்  ஆண்டு தாராவியை சேர்ந்த அன்னலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு தருண் என்ற மகனும், லட்சாவதி என்ற மகளும் உள்ளனர். மனைவி கணவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் சிறிய அளவிலான பேக்கிங்களை கையால் ஒட்டிக் கொடுத்து வந்தனர். இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. நாளடைவில் நிறுவனத்தின் பொருட்கள் அதிகளவில் விற்பனையானயடுத்து, அப்போதைய காலக்கட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பு ள்ள மஷின் வாங்கப்பட்டு அதன்மூ லம் பேக்கிங் செய்யப்பட்டு வினியோ கிக்கப்பட்டது. 2006ம் ஆண்டு நிறுவனத்திற்கு உரிமம் பெறப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் கொஞ்சம்தான் படிச்சிரு க்கேன். கடினமாக உழைத்து 200 பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறேன். இன்றைய கால கட்டத்தில் அனைவரும் படித்து இருக்கிறார்கள்.அவர்களும், நல்ல தொழில்களை தொடங்கி பல பேருக்கு வேலை வழங்கலாம். எங்களுடைய நிறுவனத்தில் பட்டம் படித்தவர்கள் வேலை செய்கிறார்கள். தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் மருத்துவ காப்பீடு எடுத்துக் கொடுத்துள்ளோம். மேலும் தொழிலை விரிவுப்படுத்தி பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். கடவுளின் அருளாலும், பெற்றோர் மற்றும் தாய்மாமாக்களின் ஆசீர்வாதத்தாலும், தொழிலா ளர்களின் ஒத்துழைப்பாலும் நிறு வனத்தை திறம்பட நடத்தி வருவதாக பெருமையுடன் குறிப்பிட்டார்.

Tags : Publi ,children ,adults ,Bundy ,Puppies , Puppies , bungee, smash feeders , kids ,adults
× RELATED மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு...