×

சமூக சேவை செய்துவரும் ‘மும்பை பொன்மனச் செம்மல்’ டாக்டர் வி. சுப்ரமணியம் சுவாமி

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் வி.சுப்ரமணியம் சுவாமி. அந்த ஊரில் தங்கியி ருந்து படித்து வந்தார். இவரது பூர்வீகம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே உள்ள கவுண்டன்பாளையம் ஆகும். 1975-ம் ஆண்டு இவரது தந்தை வரதன் காலமானார். இதனை யடுத்து சுப்ரமணியம் சுவாமி 1977-ம் ஆண்டு மும்பைக்கு குடியேறினார். 1978ம் ஆண்டு விஜயலட்சுமி என்ற பெண்ணை திரும ணம் செய்து கொண்டார்.மும்பையில் குடியேறிய அவர், பல இடங்களில் வேலை செய்தார். பின்னர் நாளடைவில் சொந்தமாக தொழில் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். மேலும், மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். மும்பை மலாடு பகுதியில் வசித்து வரும், அப்பகுதிவாசிகளுக்கு தன்னால் இயன்ற உதவி களை செய்து வருகிறார். 2012-ம் ஆண்டு தேசிய தமிழ்ச் சங்கத்தை தொ டங்கி நடத்தி வருகிறார். பொங்கல் விழா, கபடி போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி வருவது மட்டுமல்லாமல் பல்வேறு சமூகப் பணிக ளையும் செய்து வருகிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராகவும், அஇஅதிமுகவின் தீவிர தொண்டராகவும் இருந்து வருகிறார்.  

இவரது சமூக சேவையை பாராட்டி 2012-ம் ஆண்டு மும்பை கலை இலக்கிய மன்றம் இவருக்கு மும்பை பொன்மனச் செம்மல் விருதும், 2015-ல் தமிழ்நாடு எஸ்றா யுனிவர்சிட்டி மற்றும் அமெரிக்க டெய்ஸ்பிரிங் தியோலாஜிக்கல் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 6-01-2018 அன்று மும்பை நகைச்சுவை மன்றம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது, 5-12-2018 அன்று மனித உரிமை பாதுகாப்பு மற்றும் அவசர நடவடிக்கை அமைப்பு சார்பில் எம்.ஜி.ஆர் விருது, 09-03-2019 அன்று நேஷனல் ஹியுமன் ரைட்ஸ் & சோஷியல் ஜஸ்டீஸ் ஆணையம் என்ற அமைப்பின் சார்பில் சமாஜ் ரத்னா விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : V. Subramaniam Swamy ,Mumbai , Social Work , Mumbai,Subramaniam Swamy
× RELATED மும்பை தாராவியில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி