×

‘இளம் வணிகவேந்தன்’ விருது பெற்ற மும்பை பவுல்: பவுல் கலெக்‌ஷன்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் ஓவர்ச்சேரி என்ற கிராமத்தை சேர்ந்த நாகராஜன் - ருக்மணி தம்பதியின் மூத்த மகன் மும்பை பவுல், 1996ம் ஆண்டு மும்பைக்கு வந்து தன் பள்ளி படிப்பை தொடங்கி 10-ம் வகுப்பு வரை படித்தார். வறுமை காரணமாக பள்ளிபடிப்பை தொடர முடியாமல் போனது. பின்னர் அவர் தாஜ் ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து அங்கு இரண்டு வருடம் வேலை பார்த்தார். பின்னர் துணி மார்க்கெட்டிங் செய்யும் வேலையிலும் சேர்ந்தார். படிப்படியாக தன் உழைப்பால் யர்ந்த மும்பை பவுல் சொந்தமாக தொழில் துவங்க அவருடைய நண்பர்கள் உதவி செய்தனர். நண்பர்களின் உதவி மற்றும் இவருடைய ஓயாத உழைப்பு காரணமாக மன்னார்குடி, சென்னை மற்றும் மும்பையில் துணிக்கடை தொடங்கி அதனை நல்லப்படியாக நடத்தி வருகிறார். இவரும் இவருடைய நண்பர் அழகுசுந்தரமும் மராத்திய விஜய் நற்பணி இயக்கம் சார்பாக பல உதவிகள் செய்து வருகின்றனர். அது மட்டுமல்ல மும்பை பவுல் தன்னால் தொடரமுடியாத கல்வியினால் தான் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டேனோ அதை போல மற்றவர்கள் கஷ்டம் படக்கூடாது என்பதற்காக 40க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்து வருகின்றார். தான் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு கடவுளின் கிருபை தான் முதன்மையான காரணம் என்கிறார் மும்பை பவுல்.

அண்மையில் வேந்தர் தொலைகாட்சி சார்பில் ‘இளம் வணிகவேந்தன் விருது 2019’ பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நெற்குன்றத்தில் பவுல் கலெக்‌ஷன் என்ற புதிய துணிக்கடையை தொடங்கியுள்ளார். இளம் தொழிலதிபரான இவர், தனது தொழிலை விரிவுப்படுத்தியுள்ளார்.
மராட்டிய மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாவையும் சென்ற மாதம் சிறப்பாக நடத்தி முடித்தார்கள்.
இவர்கள் இருவரும் மராட்டிய மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவராக அ.அழகுசுந்தரம் மாநில செயலாளராக மும்பை பவுல் இருந்தாலும் இவர்கள் இருவரின் நட்பு மற்றும் ஒற்றுமையை கருத்தில் கொண்டு அகில இந்திய தலைமை மக்கள் இயக்கத்தினர் எந்த இடத்திலும் இல்லாத ஒன்றாக இருவரையும் அகில மராட்டிய மாநிலத்தின் விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக நியமனம் செய்துள்ளார்கள்.

Tags : Mumbai Bowl, Young Collection, Paul Collection
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...