
துனிஸ்: துனிசியாவில் படகு ஒன்று கடலில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய தரைக் கடல் பகுதியில் இப்போது மோசமான வானிலை, கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனை அறியாமல், தப்ப முயன்ற அகதிகள் கப்பல்கள் கடந்த சில நாட்களாக விபத்தில் சிக்கி மூழ்கி வருகின்றன. இந்நிலையில் துனிசியா நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று நேற்று புறப்பட்டு புறப்பட்டு சென்றது. அப்போது அங்குள்ள லம்பேடுசா தீவை நெருங்கியபோது மோசமான வானிலை காரணமாக கடல் அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்த இத்தாலி கடற்கரை படையினர், இரு மீட்பு கப்பல்களுடன் சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 22 பேரை பத்திரமாக மீட்டனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த 13 பெண்களின் சடலமும் மீட்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை மத்தியதரைக் கடலில் இது போன்ற விபத்துகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.