×

அனைத்து வசதிகளையும் பெற்ற சிங்கப்பூரில் கூட டெங்கு பாதிப்புகள் உள்ளன; டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: சென்னையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். தெலங்கானா ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்ற  பின் முதல்முறையாக அவரை முதல்வர் பழனிசாமி சந்தித்தார். பின்னர் பேட்டியளித்த அவர்; தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தேன். தமிழிசையை தெலுங்கானா ஆளுநராக நியமித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

கீழடி அகழாய்விற்கு உரிய வசதிகள் செய்யப்படும்: மேகதாது விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என வலியுறுத்தி ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழக அரசின் முயற்சியால் மேகதாதுவில் அணை கட்டும் முடிவுக்கு சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளதால் 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெரும் என கூறினார்.

மேலும் பேசிய அவர்; அனைத்து வசதிகளையும் பெற்ற சிங்கப்பூரில் கூட டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் உள்ளன. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்ச்சல் என வந்தவுடனே அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்; காலம் தாழ்த்தி செல்ல வேண்டாம். டெங்கு காய்ச்சல் ஒழிக்கும் அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Singapore ,facilities ,CM Palanisamy ,Government ,spread , Dengue, Government, Action, Chief Minister Palanisamy
× RELATED சிங்கப்பூரில் இருந்து...