×

ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக் கொள்ள பிரான்ஸ் புறப்பட்டார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி : பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒப்பந்தத்தின் படி தயாரிக்கப்பட்ட முதல் ரபேல் போர் விமானத்தை செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

துறைமுக நகரான பார்டியாக்ஸ் நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ரபேல் போர் விமானத்திற்கு பூஜைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக 3 நாள் அரசு முறைப் பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் புறப்பட்டார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானைச் சந்திக்கும் ராஜ்நாத் சிங், இருநாடுகள் இடையே பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பின்னர் ரபேல் போர் விமான நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பூஜைக்குப் பின்னர் ராஜ்நாத் சிங் அந்த விமானத்தில் பறக்க உள்ளார். தசரா மற்றும் இந்திய விமானப் படை நிறுவப்பட்ட நாளன்று இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Rajnath Singh ,France ,Rafael ,visit ,Paris , Rajnath Singh,Defence Minister,Delhi ,Paris,Rafale
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...