×

சேரனூர், தொட்டகம்பை கிராமத்தில் அட்டகாசம் செய்த 40 குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன

மஞ்சூர் : சேரனூர், தொட்டகம்பை கிராமத்தில் அட்டகாசம் செய்து வந்த 40க்கும் மேற்பட்ட குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தார்கள். மஞ்சூர் அருகே உள்ளது சேரனூர், தொட்டகம்பை கிராமங்கள். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக நூற்றுக்கணக்கான குரங்குகள் முற்றுகையிட்டு பெரும் அட்டகாசம் செய்து வந்தது. இவை விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர் செடிகளை நாசம் செய்வது, திறந்து கிடக்கும் வீடுகளில் புகுந்து தின்பண்டங்களை தூக்கி செல்வது, பொருட்களை வாரியிறைப்பது போன்ற அட்டகாச செயல்களில் ஈடுபட்டு வந்தன. சில நேரங்களில் மனிதர்களையும் குரங்குகள் தாக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் அச்சம் அடைந்த அந்த பகுதி மக்கள் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தனர். இதன் பேரில் வனத்துறை சார்பில் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக சேரனூர் மற்றும் தொட்டகம்பை பகுதிகளில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன. இந்த கூண்டுகள் மூலம் சுமார் 40க்கும் மேற்பட்ட குரங்குகளை வனத்துறையினர் பிடித்தனர். பிடிபட்ட குரங்குகளை வனத்துறையினர் தனியார் வாகனம் மூலம்  பெரும்பள்ளம் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.

Tags : village ,Thottagambai ,Cheranur ,Guage , Manjur , seranur,Monkies ,guage, forest department
× RELATED வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்..!!