×

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட 3 இந்திய என்ஜினீயர்கள் விடுதலை

காபுல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட 3 இந்திய என்ஜினீயர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான முக்கிய மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான நிலையங்களில் இந்தியாவை சேர்ந்த சுமார் 150 என்ஜினீயர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவ்வகையில், பாக்லான் மாகாணத்தில் பணியாற்றிவரும் கடந்த 6-5-2018 அன்று ஒரு மினி பஸ்சில் பாக்-இ-ஷாமல் பகுதியில் உள்ள மின்சார உற்பத்தி நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் வந்த தலிபான் பயங்கரவாதிகள் அந்த வாகனத்தை வழிமறித்தனர்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த டிரைவர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 7 பொறியாளர்களை அவர்கள் வாகனத்துடன் கடத்திச் சென்றனர். அவர்களை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் சமரசக்குழுவினருடன் அடிக்கடி தொடர்புகொண்ட முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மறைந்த சுஷ்மா சுவராஜின் தொடர் முயற்சியால் கடந்த மார்ச் ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டார். மற்றவர்களின் கதி என்ன ஆனது? என்பது புரியாமல் இருந்தது.

இந்நிலையில், கைதிகள் பரிமாற்றம் அடிப்படையில் நடந்த பேச்சுவார்த்தையின் எதிரொலியாக 11 தலிபான் பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் அரசு விடுதலை செய்ததாகவும் அதற்கு மாற்றாக கடந்த ஆண்டில் கடத்தப்பட்ட  7  இந்திய என்ஜினீயர்களில் 3 பேரை தலிபான்கள் நேற்று விடுவித்ததாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார். இந்த 3 இந்திய என்ஜினீயர்களும் ஆப்கானிஸ்தான் நாட்டின் எந்த பகுதியில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது தொடர்பான விரிவான தகவலை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

Tags : engineers ,Taliban ,Indian ,militants ,Afghanistan , Afghanistan, Taliban terrorists, Indian engineers, Liberation
× RELATED கொரோனா தடுப்பு பணிக்கு கூடுதல் பொறியாளர்கள்