×

18 பேர் பதவி இழக்க காரணம் டிடிவி.தினகரன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: அமமுக போட்டி கூட்டத்தில் தீர்மானம்

கோவை:கோவை, மசக்காளிபாளையத்தில் அமமுகவுக்காக சிறை சென்றவர்களுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் டிடிவி தினகரனுக்கு எதிராக அமமுக போட்டிகூட்டம் நேற்று நடைபெற்றது. அமமுக செய்தி தொடர்பாளரும், கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் நீக்கப்பட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  அதிமுகவை மீட்டெடுப்பதாக கூறிய தினகரன், புதிய கட்சியை தொடங்கியதை பொதுமக்களும், கட்சியினரும் விரும்பவில்லை. கட்சியில் இருந்து வெளியேறுபவர்கள் வெளியேறலாம் என டிடிவி தினகரன் கூறி வருவது கண்டனத்துக்குரியது.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்தித்ததே, அவர்கள் பதவி இழக்க காரணம். இதற்கு காரணமாக இருந்த தினகரன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதன்பின், புகழேந்தி அளித்த பேட்டி:-டிடிவி.தினகரனுக்காக ஆதரவாக பல கூட்டங்களில் பேசியதற்காக வெட்கப்படுகிறேன், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் பின்னால் இருவர் மட்டும் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஜெயலலிதா, மற்றொருவர் சசிகலா. அதிமுக அரசை ஆதரிக்கும் முடிவை சசிகலா எடுப்பார் என நம்புகிறேன். டிடிவி தினகரன் போன்ற பசுத்தோல் போர்த்திய நரியை பார்த்தது இல்லை. டிடிவி தினகரனிடம் ஒரு ஸ்லீப்பர் செல்கூட கிடையாது. அதிமுக கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : resignation ,DDV ,MLA , reason, dismissal , resign ,MLA's post
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்