×

31 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

வேலூர்: தொடர் விடுமுறையையொட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 41 டோல்கேட்களில் வாகன சோதனையில் ஈடுபட ஆர்டிஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா, ராணிப்பேட்டை, வாணியம்பாடியில் வாகன சோதனை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி மாலையில் இருந்து நடத்திய சோதனையில் பிறமாநில வாகனங்கள், ஏர்ஹாரன் உட்பட விதிமீறியதாக 31 ஆம்னி பஸ்களுக்கு 78 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.Tags : Omni The Buses , 31 Omni,buses Fined
× RELATED சேலத்தில் இன்று முதல் அமல்: சாலை...