×

உலக நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள்: தமிழச்சி தங்கபாண்டியன், எம்பி

தமிழகம் வந்தாரை வாழவைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை தேர்ந்தெடுத்தது தொடர்பாக அதற்கான காரணத்தை அறிஞர் அண்ணா சொல்கிறார். திராவிடர் முன்னேற்ற கழகம் என்று வைத்தால் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் தான் வாழ முடியும் என்கிற கருத்து வந்து விடும். அப்படி இல்லாமல் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதால் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்று வைக்கப்பட்டது. எப்போதும், குறுகலான மனோபாவம் இருக்க கூடாது என்பதை தான் அண்ணா சொல்கிறார். அதே நேரத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, குறிப்பாக, மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் அல்லாதவர்கள் தேர்வாகி உள்ளனர் என்ற உண்மை கவலைக்குரியதாக உள்ளது. ரயில்வே துறையில் இந்தியில் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதன் நிர்வாகம் அறிவித்தது. இதற்கு எதிராக நாங்கள் போராட்டம்  நடத்தினோம். அதன்விளைவாக அந்த உத்தரவை வாபஸ் பெற்றனர். இப்படி மறைமுகமாக இந்தியை தேர்வு மூலம் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். கீழடி நாகரிகம் என்பது அனைவரும் அறிந்தது தான். கடல் கடந்த குமரிகண்டத்தில் தோன்றிய நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகமாக படர்ந்து சுமேரியன் நாகரிகமாக மாறியது. சிந்து சமவெளி நாகரித்திற்கு தொடக்கப்புள்ளி தமிழர் நாகரிகம் தான் என்பதை ஸ்பெயின் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். அவர், தன்னை ஸ்பெயின் தேசத்தில் இருந்து வந்த திராவிடன் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொள்வதில் பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

கீழடி நாகரிகம் அறிவியல் பூர்வமாக ஆதாரத்துடன் நம்மை நிரூபித்து காட்டியுள்ளது. தமிழர்கள் நீர் மேலாண்மையில், விவசாயத்தில், கட்டிட கலையில் சிறந்து விளங்கினர் என்பதை நிரூபித்துள்ளது. தமிழர்களின் நாகரிகத்தை தமிழருடைய பண்பாட்டை தான் முன்னிறுத்த வேண்டும். அதில், இந்தியன் என்ற ெசால்லாடலை ஏன் திணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. நாம் இந்தியர்கள் தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதில் பெருமை கொள்கிறோம். தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு, நீர் மேலாண்மை, கட்டிட கலை, கலை, இலக்கிய பண்பாடு என்று ஒன்று உண்டு. அதோடு தான் சக மாநிலத்தவரோடு இருக்கிறோம். ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பண்பாடு செழுமை இருக்கிறது. அகில உலக நாகரீகத்துக்கு சொந்தக்காரராக தமிழர்கள் இருக்கிறோம்.  

வியட்நாமில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. அங்கு தமிழர் ஒருவர் கடல் வாணிபம் செய்ததற்கான பதிவு உள்ளது. கிழக்கு ஐரோப்பியா, ஆசிய நாடு பெயர்களில் ஆராய்ந்து பார்த்தால் அது தமிழ் பெயர்களாக இருக்கும். தென் தமிழ் நாகரிகத்தோடு ஒப்பிடும் போது, தாய்லாந்து, சீனாவிலும் நாகரிகத்தோடு ஒப்பிடும் அளவுக்கு இருக்கும். நீர் மேலாண்மையில் தென்தமிழக பகுதியை சேர்ந்த மக்கள் தான் முன்னெடுத்துள்ளனர் என்பதற்கு சான்று உள்ளது. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்கள் தென் தமிழ் எழுத்துக்கள் என்பது தொல்காப்பியத்தில் உள்ள தரவுகளை வைத்து நிரூபித்துள்ளனர். அகில உலகத்திற்கான முன்னோடியாக தமிழர்கள் வாழ்ந்து இருக்கின்றனர். அதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் தான் கீழடி நாகரிகம். நாம் அதை பெருமிதத்தோடு சொல்லி கொள்ள வேண்டும்.

கீழடி நாகரிகம் அறிவியல்
பூர்வமாக ஆதாரத்துடன் நம்மை நிரூபித்து காட்டியுள்ளது. தமிழர்கள் நீர் மேலாண்மையில்,  விவசாயத்தில், கட்டிட கலையில் சிறந்து விளங்கினர் என்பதை நிரூபித்துள்ளது.


Tags : Tamils ,Owners Tamilsachchi Thangabandian ,MB , world civilization, Owners Tamils, Tamilsachchi Thangabandian, MB
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு