×

ஆயுத பூஜையையொட்டி ஒரு கிலோ எலுமிச்சம் பழம் 150 ஆக உயர்வு: ஒரு பழம் 10 முதல் 15 வரை விற்பனை

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு எலுமிச்சை விலை அதிகரித்து கிலோ 150 க்கு விற்கப்பட்டு வருகிறது.சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து எலுமிச்ைச பழம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் ஒரு டன் எலுமிச்சை விற்பனைக்கு வரும். சீசன் காலத்தில் ஒரு கிலோ 25 முதல் 40 வரையும், ஒரு எலுமிச்சம் பழம் 3க்கும் விற்பனையாகும்.

தற்போது சீசன் இல்லாததால் உள்ளூர் மற்றும் வெளியூர் வரத்து மிகவும்குறைந்துவிட்டது. இதனால் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ 110 க்கும், ஒரு பழம் 10க்கும் விற்றது. தற்போது நவராத்திரி விழா, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு எலுமிச்சம் பழம் விலை அதிகரித்துள்ளது. கிலோவுக்கு 40 அதிகரித்து 150 க்கு விற்றது. ஒரு பெரிய பழம் 15க்கும், சிறிய பழம் 10 க்கும் விற்றது. எலுமிச்சை விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Armed, lemon fruit, fruit
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...