×

பங்குச்சந்தையில் இருந்து ரூ.3,000 கோடி வெளியேற்றம்

புதுடெல்லி: பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 3 வர்த்தக நாட்களிலேயே ₹3,000 கோடியை வெளியேற்றியுள்ளனர். இதுதவிர, கடன் பத்திரங்களில் மேற்கொண்ட ₹977 கோடியையும் வெளியேற்றியுள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த மாதம் இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் ₹7,850 கோடி முதலீடு செய்துள்ளனர். ஆனால், இந்த மாதம் கடந்த 1ம் தேதி, 3ம் தேதி மற்றும் 4ம் தேதிகளில் பங்குச்சந்தையில் ₹2,947 கோடியை வெளியேற்றியுள்ளனர். கடன் பத்திரங்களில் ₹977 கோடி வெளியேற்றியுள்ளனர். இதன்படி மொத்தம் ₹3,924 முதலீட்டை வாபஸ் பெற்றுள்ளனர்.

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி தொடர்ந்து 5வது முறையாக ரெப்போ வட்டியை குறைத்து 5.15 சதவீதமாக நிர்ணயித்து கடந்த வாரம் அறிவித்தது. இதனால் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. இந்திய பொருளாதார மந்த நிலை, சர்வதேச சந்தை நிலவரங்கள், போர் பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் மிகுந்த கவனமுடன் இருந்தனர். இதனால் முதலீடு அபரிமிதமாக வெளியேறியுள்ளது என சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

Tags : exit , Rs 3,000 crore, exit,stock market
× RELATED பங்குச் சந்தையில் கிரகங்களின் விளையாட்டு