×

2வது இன்னிங்சில் கலக்கும் ஷமி!

இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி டெஸ்ட் போட்டிகளின் 2வது இன்னிங்சில் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட் வேட்டை நடத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். 16 முதல் இன்னிங்ஸ்களில் 23 விக்கெட் வீழ்த்தியுள்ள அவர், 15 இரண்டாவது இன்னிங்ஸ்களில் 40 விக்கெட் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸ்களில் ஒரு முறை கூட 5 விக்கெட் வீழ்த்தாத அவர், 2வது இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை 3 முறை நிகழ்த்தியுள்ளார். சராசரி மற்றும் ஸ்டிரைக் ரேட்டிலும் கூட 2வது இன்னிங்ஸில் ஷமியின் செயல்பாடு மிரட்டலாக உள்ளது.

* முதல் இன்னிங்சில் 400+ ஸ்கோர் எடுத்த பின்னர், தென் ஆப்ரிக்கா சந்தித்த மிகப் பெரிய தோல்வியாக (203 ரன் வித்தியாசம்) இது அமைந்தது. மேலும், முதல் இன்னிங்சில் 400+ ஸ்கோர் எடுத்த போட்டிகளில் அந்த அணி 5வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.
*  தனது 66வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆர்.அஷ்வின் 350 விக்கெட் என்ற சாதனை மைல்கல்லை விரைவாக எட்டிய வீரர்கள் வரிசையில் முத்தையா முரளிதரனுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். முரளி 66 டெஸ்ட், 106 இன்னிங்ஸ், 21632 பந்து, 28 முறை 5 விக்கெட், 7 முறை 10 விக்கெட், 9 ஆண்டு/9 நாள். அஷ்வின் 66 டெஸ்ட், 124 இன்னிங்ஸ், 18685 பந்து, 27 முறை 5 விக்கெட், 7 முறை 10 விக்கெட், 7 ஆண்டு/332 நாள்.
*  இந்த டெஸ்டில் மொத்தம் 37 சிக்சர்கள் விளாசப்பட்டது புதிய உலக சாதனையாக அமைந்தது. பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையே 2014 நவம்பரில் நடந்த டெஸ்டில் 35 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே முந்தைய அதிகபட்சமாகும்.


Tags : Shami ,innings , Shami, mixing, 2nd innings!
× RELATED 178 ரன்னில் சுருண்டது வங்கதேசம் இலங்கை வலுவான முன்னிலை