×

தேர்தல் நேரத்தில் திடீர் முடிவு தாய்லாந்துக்கு ராகுல் பயணம்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தாய்லாந்துக்கு திடீர் பயணமாக சென்றார். அரியானாவில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட சீட் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், ராகுலுக்கு நெருக்கமானவரும், அரியானா முன்னாள் காங்கிரஸ் தலைவருமான அசோக் தன்வர் கட்சியில் இருந்து நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். ராகுலுக்கு நெருக்கமானவர்கள் கட்சியில் ஓரம் கட்டப்படுவதாக அவர் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி திடீரென தாய்லாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்குள்ள பாங்காக்கில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 21ம் தேதி அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில்அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேங் சிக்வி கூறுகையில், ‘‘ பிரசாரத்தில் தேவைப்படும் நேரத்தில் ராகுல் பங்கேற்பார். ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தை நாம் மதிக்க வேண்டும்,’’ என்றார்.


Tags : trip ,Rahul ,Thailand , Rahul's trip , Thailand ,during election time
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...