குலசை. தசரா திருவிழா: ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் வீதியுலா

உடன்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 7ம்நாள் விழாவில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் வீதியுலா நடந்தது. இன்று கசலெட்சுமி திருக்கோலத்தில் வீதியுலா நடக்கிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோயில் தசரா திருவிழா கடந்த 29ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம்நாள் விழாவில் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 4.30 மணிக்கு மகிசாசூரன் திருவீதியுலாவும், 5 மணி வரை சமயசொற்பொழிவும், மாலை 6 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பல்சுவை நிகழ்ச்சியும், 10 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்தநடராஜர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும் நடந்தது.

8ம் நாளான இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 3 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை சமயசொற்பொழிவும், 6 மணிக்கு பரதநாட்டியம், இரவு 8 மணிக்கு மெல்லிசை விருந்து, 10 மணிக்கு கமல வாகனத்தில் கசலெட்சுமி திருக்கோலத்தில் திருவீதியுலா நடக்கிறது. 9ம் திருநாளான நாளை காலை 8மணி முதல் இரவு 7.30மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 4மணி முதல் மாலை 5மணி வரை சமயசொற்பொழிவும், மாலை 6 மணிக்கு நாதலைம் பக்தி இன்னிசையும், இரவு 8 மணிக்கு ஆன்மீகச் சிந்தனைப் பட்டிமன்றமும், இரவு 10 மணிக்கு அன்னவாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலாவும் நடக்கிறது.

Tags : Dasara Festival ,Ananda Nadarajar Veedivula ,Dasara Festival: Tirukkolam , Kulacai. Dasara Festival, Vidyula
× RELATED செங்கல்பட்டு தசரா விழா நிறைவு