×

ஒரு டன் ரூ1320க்கு இறக்குமதி; ரூ2,300க்கு விற்பனை: மலேசிய மணல் விற்பனையில் முறைகேடு

* லாரி உரிமையாளர் சங்கம் பகீர் குற்றச்சாட்டு
* தனியார் மூலம் விற்பது ஏன் எனவும் கேள்வி

சென்னை: மலேசிய மணல் விற்பனையில் முறைகேடு நடப்பதாக மணல் லாரி உரிமையாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், தனியார் மூலம் மணல் விற்பனை செய்வது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது: தமிழகத்தில் ஆற்றுமணல் விற்பனையை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று கடந்த 2003ல் உயர்மட்ட குழு கூறியது. தனியார் மணல் எடுப்பதால் நீராதாரம் பாதிக்கப்படுகிறது, கரைகள் உடைக்கப்படுகிறது, மணல் கொள்ளை அடிக்கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கின்றனர் என்று அந்த உயர்மட்ட குழு தெரிவித்தது. அதன்பேரில் தான் தமிழக அரசு மணல் விற்பனை செய்கிறது. ஆனால், மலேசிய மணல் விற்பனை மட்டும் தற்போது தனியார் மூலம் செய்கிறது. அரசு ஏன் இந்த மணல் விற்பனை செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

மலேசிய மணல் 1 டன் 9.5 டாலர். அதாவது ரூ680க்கு அந்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மலேசிய நாட்டில் இருந்து 7158 கி.மீட்டர் இருக்கிற கர்நாடகா மாநிலம் மங்களூர் துறைமுகத்தில் 1 டன் மணல் ரூ1,650 தருகிறார்கள்.
ஆந்திராவில் கிருஷ்ணாபட்டினம் துறைமுகத்தில் 1 டன் 1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், 6,500 கி.மீ இருக்கிற தமிழக அரசு 1 டன் 2,300க்கு விற்பனை ெசய்கிறது. இதுவரை 8 கப்பல் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளது. ஒரு கப்பலில் 55 ஆயிரம் டன் வீதம் மணல் வந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ₹50 ேகாடி  வருவாய் வந்துள்ளதா என்பதை முதல்வர் விளக்க வேண்டும். மலேசியாவில் இருந்து காமராஜர் துறைமுகத்துக்கு மணல் வந்து தர 1 டன்னுக்கு ₹1320 தருகிறார்கள். 1 யூனிட் ₹5,200தான் ஆகிறது. ஆனால், தமிழக அரசு 1 யூனிட் ₹10,300க்கு விற்கின்றனர். இந்த மணலை இரண்டு மடங்கு அதிக விலைக்கு விற்பது ஏன் என்று தெரியவில்லை.

அரசு நேரடியாக மணல் கொள்முதல் செய்யலாம். ஏன் மூன்றாவது நபரை வைத்து மணல் விற்பனை செய்கின்றனர். அரசு மணல் விற்கும் போது கூட மூன்றாம் நபரை உடன் வைத்து ெகாள்கிறது. அரசு மணல் விற்றாலும் அள்ளிப்போட ஒருவரை வைக்கின்றனர். அரசு கூடுதல் பணத்தை வாங்குவதற்காக தான் மூன்றாம் நபரை வைக்கிறதோ என்ற சந்ேதகம் உள்ளது. இதன் மூலம் மலேசிய மணல் விற்பனையில் முறைகேடு நடக்கிறதோ என எண்ணத் ேதான்றுகிறது.
மலேசிய மணல் இறக்குமதி உரிமத்தை அரசுக்கு வேண்டிய ஒரு சிலருக்கு வழங்குவதை தவிர்த்து, வெளிப்படைத்தன்மையில் அனுமதி வழங்கினால், குறைவான விலைக்கே மற்ற மாநிலங்களில் கிடைப்பது போன்று தமிழக மக்களுக்கும் கிடைக்கும். பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமான பணிகளும் தொடரும். ஆந்திராவில் இருந்து மணலை வாங்கி விற்பனை செய்ய ஏன் அரசு அனுமதி மறுக்கிறது.

அரசு மணல் தராத நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து மணலை கொண்டு வந்து விற்பதை தடுப்பது எதனால்? கடந்த 4 வாரங்களாக மணல் விற்பனை நிறுத்தி வைத்துள்ளது. ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதெல்லாம் மணல் விற்பனை நிறுத்துகின்றனர். இதற்கு, காரணம், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் நாமக்கல்லில் அமைச்சர் ஒருவர் எங்களது ஊரில் மணல் கடத்தல் இல்லை என்று கூறினார். ஆனால், எம்பி மணல் கடத்தப்படுவதை கையும், களவுமாக பிடித்து காட்டினார். ஒருவேளை தேர்தல் நேரத்தில் அரசு குவாரிகளில் இருந்து திருடப்படும் மணல் தொடர்பாக வெளியில் தெரிந்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நினைக்கிறார்களா என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Malaysian , Malaysian sand, irregularities in sales
× RELATED மலேசியாவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 10 பேர் பலி