×

திருக்கோவிலூர் பகுதியில் கம்பு உலர வைக்கும் பணி தீவிரம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பகுதிகளில் கம்பு உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் பகுதிகளில் கடந்த இரண்டு வருடமாக போதிய மழை இல்லாத காரணத்தால் விவசாயத்தில் பெருத்த நஷ்டமடைந்தனர். இதன் விளைவாக வழக்கமாக பயிரிடப்படும் நெல், கரும்பு உள்ளிட்டவைகளை தவிர்த்து குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை இந்த வருடம் விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது கம்பு அறுவடை செய்யும் நேரத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வரும் காரணத்தால் அறுவடை செய்த கம்பை களத்தில் உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கம்பு விளைச்சல் அதிகமாக உள்ள நிலையில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வருடத்தை விட மூட்டைக்கு ஆயிரம் ரூபாய் குறைவாக உள்ளதால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

Tags : Thirukkovilur, rye drying work
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!