×

தமிழகத்தில் சிறப்பான சிகிச்சையால் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேளராவில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், தமிழகத்தில் சிறப்பான சிகிச்சையால் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லையென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய உள்ளூடுருவி ஆய்வகம் மற்றும் சிகிச்சைப்பிரிவு மையங்களை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் மகப்பேறு மருத்துவம் 70 சதவீதம் அரசு மருத்துவமனையில் நடப்பதாகவும், மீதம் 30 சதவீதம் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் நடப்பதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்துவதை தடுத்து நிறுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களை விட தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து வருகிறது என தெரிவித்தார்.

Tags : Minister Vijayabaskar ,Dengue fever deaths ,Tamil Nadu , Vijayabhaskar, Minister of Treatment, Dengue Fever
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...