×

பவானி அருகே ஏரி உடைந்தது: பல ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

பவானி: பவானி அருகே ஏரி உடைந்ததால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் அடைந்தது. ஈரோடு மாவட்டம் பவானி - பெரியபுலியூர் ரோட்டில் மாரப்பம்பாளையம் அருகே சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. மாரப்பம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால், வயல்வெளிகள் நிரம்பி உபர்நீர் ஏரியில் பெருக்கெடுத்து தேங்கியது. ஏரி ஏற்கெனவே நிரம்பியிருந்த நிலையில் மேலும் தண்ணீர் பெருக்கெடுத்து மரம், செடி, கொடிகளை அடித்துக் கொண்டு வந்தது.

இந்தநிலையில், உபரிநீர் வெளியேறும் மதகில் முட்கள், செடி, கொடிகள் அடைத்துக் கொண்டதால் தண்ணீர் வெளியேறாமல் தேங்கியது. இதனை தொடர்ந்து ஏரி கரையில் சுமார் 15 அடி நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி மாரப்பம்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்தது. வயல்வெளியில் புகுந்து தண்ணீர் ஓடியதால் 2.5 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மண் மூட்டைகள் கொண்டு அடைத்தனர்.

Tags : Lake ,Bhavani , Bawani, Lake broken
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு