×

மழை பெய்ய வேண்டி மலை உச்சியில் உணவை கொட்டி 3 கிராம மக்கள் விநோத வழிபாடு: எழுமலை அருகே பக்தர்கள் பரவசம்

உசிலம்பட்டி: மழை பெய்ய வேண்டி மலை உச்சியில் உணவை கொட்டி 3 கிராம மக்கள் சாப்பிட்டு ேநற்று வினோத வழிபாடு நடத்தினர். மதுரை மாவட்டம், எம்.கல்லுப்பட்டி அருகே மலை உச்சியில் ஓணாகரடு நீலமேக பெருமாள் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி 3வது சனிக்கிழமை இப்பகுதியில் விவசாயம் செழிக்க வேண்டுமென மக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். நேற்று எம்.கல்லுப்பட்டி, சூலப்புரம், மள்ளப்புரம், ஆகிய கிராம மக்கள்  அரிசி, பருப்பு, காய்கறி, காணிக்கை பணம் ஆகியவற்றை வசூல் செய்து மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சமையல் செய்து சாமிக்கு படைக்கப்பட்டு அனைவரும் வணங்கி வழிபட்ட பின்பு, அங்குள்ள பாறையில் உணவை கொட்டி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சாப்பிட்டனர். சாப்பிட்ட இடம் எச்சில்பட்டுள்ளதால் நீலமேகப்பெருமாள் மழையை வரச்செய்து அதனை சுத்தம் செய்து விடுவார் என இப்பகுதி பொதுமக்களின் நம்பிக்கையாகும். இந்த வினோத வழிபாட்டில் பங்கேற்க, இப்பகுதி பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் கடினமானப் பாதையாக இருந்தாலும் மலையேறி வந்து வழிபட்டனர்.

Tags : Pilgrims ,mountain , Rain, villagers, bizarre worship
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...