×

ஒரே குடும்பத்தில் 6 பேர் கொலை இளம்பெண் உட்பட 3 பேர் கைது

திருவனந்தபுரம்: கோழிக்கோடு அருகே கள்ளக்காதலனை திருமணம் செய்யவும் சொத்துக்களை அபகரிக்கவும் கணவன், உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை 14 வருடங்களில் சயனைட் கொடுத்து கொலை செய்த வழக்கில் இளம்பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.கேரளாவின் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியில் 2002ம் ஆண்டுக்கும் 2016க்கும் இடையே ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரி டோம் தாமஸ்(66), இவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை அன்னம்மா (57), இவர்களது மகன் ராய் தாமஸ் (40), அன்னம்மாவின் சகோதரன் மேத்யூ (68), டோம் தாமசின் சகோதரர் சக்கரியாவின் மகன் ஷாஜூவின் மனைவி சிலி (33) மற்றும் இவரது பெண் குழந்தை அல்போன்சா (2) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாஜூவும், மரணமடைந்த ராய் தாமசின் மனைவி ஜோளியும் திருமணம் செய்து கொண்டனர். அமெரிக்காவில் உள்ள ராய் தாமசின் அண்ணன் ரோஜோ சமீபத்தில் ஊருக்கு வந்தபோது தனது தந்தையின் பெயரில் சொத்துக்கள் ஜோளியின் பெயரில் மாற்றப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

ஜோளியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ரோஜோ, இந்த மரணங்கள் குறித்து விசாரிக்க கூடத்தாயி போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இறந்த 6 பேர் உடல்களும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று போலீசார் அதிரடியாக ஜோளியை கஸ்டடியில் எடுத்த விசாரித்தனர். அப்போது 6 பேரையும் தான் விஷம் கொடுத்து கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜோளியை கைது செய்த போலீசார் அவர் அளித்த தகவலின் பேரில் இவருக்கு சயனைட் வாங்கி கொடுத்த மேத்யூ என்ற உறவினரையும், தங்கவேலை செய்யும் பிரதீப்குமார் என்பவரையும் கைது செய்தனர். கள்ளக்காதலன் ஷாஜூவை திருமணம் செய்யவும், கணவனின் குடும்ப சொத்துக்களை அபரிக்கவும் தான் இந்த கொலைகளை செய்ததாக ஜோளி வாக்குமூலம் ெகாடுத்துள்ளார்.

Tags : teenager ,teenagers , killed,family, 3 arrested ,teenager
× RELATED விவசாயிகள், மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்