×

தீவிரவாதிகள் தாக்குதலில் 14 பேர் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் துணை ஆணையர் அலுவலகத்தை குறிவைத்து  தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி நேற்று தாக்குதல் நடத்தினர். ஆனால், அவை சாலையோரத்தில் விழுந்து வெடித்தன. இதில்  போக்குவரத்து காவலர், பத்திரிகையாளர் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.  அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர். தப்பியோடிய தீவிரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.  இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. பாதுகாப்பு  நிறைந்த துணை ஆணையர் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது  மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : attack ,Militants , Militants, Attack, injured
× RELATED ஊரடங்கின்போது மக்களைக் கண்காணிக்கும் கைக் கடிகாரம்!