×

முகமூடி தடையை மீறி போராட்டக்காரர்களால் ஸ்தம்பித்தது ஹாங்காங்

ஹாங்காங்: முகமூடி தடையை மீறி, ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் நேற்று பேரணி சென்றனர். ரயில் நிலையங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதால், ஹாங்காங் நகரம் ஸ்தம்பித்தது. ஹாங்காங் மக்கள் குற்றங்களில் ஈடுபட்டால், தாய்நாடான சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கும் வகையில் ஹாங்காங் அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக மக்கள் கடந்த 4 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கும் வகையில், போராட்டங்களில் ஈடுபடுவோர் முகமூடி அணிய, ஹாங்காங் தலைவர் கேரி லேம் நேற்று முன்தினம் தடை விதித்தார். இந்த தடை ஹாங்காங்கில் கடந்த 50 ஆண்டுகளாக பயன்படுத்தப்படவில்லை. இங்கிலாந்து காலனி ஆட்சியில் அவசரநிலை பிரகடனம் செய்தபோதுதான் இதுபோன்ற தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தடையையும் மீறி ஹாங்காங்கின் வர்த்தக பகுதியான ‘காஸ்வே பே’ பகுதியில் போராட்டக்காரர்கள் நேற்று முகமூடியுடன் பேரணி சென்றனர். அப்போது, ‘‘நாங்கள் போராட்டக்காரர்கள் அல்ல, ஆட்சியாளர்கள்தான் கொடுங்கோல் ஆட்சியில் ஈடுபடுகின்றனர்’’ என கோஷம் எழுப்பினர்.

நேற்று முன்தினம் இரவே பல ரயில் நிலையங்கள், கடைகள் சேதப்படுத்தப்பட்டதால், அவைகள் நேற்று மூடிக் கிடந்தன. முக்கிய சாலைகளில் போராட்டக்காரர்கள் தடைகளை ஏற்படுத்தி, பல இடங்களில் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஹாங்காங் தலைவர் கேரி லேம், டிவி மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதில், ‘‘நேற்று முன்தினம் இரவு நடந்த மோசமான வன்முறையை கண்டிக்கிறேன். ஹாங்காங்கின் மதிப்புமிக்க சொத்துக்களை போராட்டக்காரர்கள் இனிமேலும் அழிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. தீவிர போராட்டக்காரர்களிடம் இருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Hong Kong ,protesters , Overcoming ,mask barrier,protesters,, Hong Kong
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...