×

எங்கும் தனியார் மயம் அரசு அசுர வேகம்

புதுடெல்லி: பாரத் பெட்ரோலியம் உட்பட அரசு நிறுவனங்களை விற்பதில் அசுர வேகத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. பெரும் பொருளாதார சரிவு, பல நிறுவனங்களில் உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர்கள் வேலை இழப்பு என்று பேரிடியாக விழுந்ததால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் 1.45 லட்சம் கோடிக்கு வரி சலுகைகளை குவித்தார். இதனால் அரசு வருவாய்  குறைந்ததால், அதை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து தனியாரிடம் ஒப்படைக்க அரசு தீவிரம் காட்டுகிறது.  

நிதி அமைச்சகத்தின் ஒரு  துறை தான் ெபாதுத்துறை  பங்குகளை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தி வந்தது. இப்போது அமைச்சர்கள் இல்லாமல் செயலார்களே முடிவெடுக்கும் வகையில் தனி அமைப்பு நிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்கும் பாரத் பெட்ரோலியம் உட்பட பல நிறுவனங்களின் பங்குகளை விற்பதில் இந்த அமைப்பு தீவிரம் காட்டும்.  பங்குகளை விற்பதில் நிதி அமைச்சகம் நேரடியாக தலையிடாது. நிதி ஆயோக் மற்றும் இந்த புதிய அமைப்பு சேர்ந்து எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்து உடனே நடவடிக்கை எடுக்க அரசு முழு அனுமதி அளித்துள்ளது. நிதி பற்றாக்குறை 3.3. சதவீதத்துக்குள் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. சமீபத்தில் வரிச்சலுகையாக ரூ. 1.45 லட்சம் கோடியை கம்பெனிகளுக்கு அளித்ததை ஈடுகட்ட, ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை நிதி ஆண்டின் இறுதிக்குள் அதாவது, அடுத்த மார்ச் மாதத்துக்குள் இந்த புதிய நிதி அமைப்பு  நிறைவேற்றும் என்று தெரிகிறது.

Tags : government , Anywhere ,private, Government ,speed
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...