×

நிதி நிறுவனங்களுக்கு அரசு கிடுக்கிப்பிடி

புதுடெல்லி: ஐஎல் மற்றும் எப்எஸ் என்ற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் தத்தளித்ததை தொடர்ந்து அரசு இப்போது விழித்து கொண்டுள்ளது. பல வங்கிகள், எல்ஐசி போன்ற நிறுவனங்கள் பங்குதாரர்களாக உள்ள இந்த நிதி நிறுவனம், சாலை உட்பட பல கட்டமைப்பு திட்டங்களுக்கு வங்கிகளிடம் இருந்து நிதி பெற்று தந்து வருகிறது. இது பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியதை தொடர்ந்து இனி எந்த ஒரு தனியார் நிதி நிறுவனங்களும் இப்படி திவால் நிலைக்கு தள்ளப்படக்கூடாது; வாடிக்கையாளர்களை ஏமாற்ற  அனுமதிக்க கூடாது என்று அரசு எண்ணுகிறது. அதனால், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் திவால் நிலைக்கு தள்ளப்படுவதற்கு முன் அதை அரசு ஏற்று நடத்த முடியும். குறிப்பிட்ட காலம் வரை தீர்வு காண முயற்சிக்கப்படும்.

இதற்காக தனி சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தீர்வு அமைப்பு உருவாக்கப்பட்டு,  அந்த அமைப்பு தான் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும். நிதி நிறுவனங்கள் திவால் நோட்டீஸ் தந்தாலும், இந்த தீர்வு அமைப்பு தலையிட்டு, அந்த நிறுவனத்தின் சொத்து உட்பட நிதி ஆதாரங்களை மதிப்பிட்டு  நிதி நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பணத்தை பெற்று தரும் என்று மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் கூறினர்.


Tags : institutions ,government , financial, The government, stupid
× RELATED அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI...