×

தமிழிசை இல்லாவிட்டாலும் பாஜ வளரும் : வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழக பாஜ பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நேற்று பிற்பகல் 1.30 மணி விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாஜ தலைவராக இருந்த போதும் பாஜ வளர்ந்து கொண்டுதான் இருந்தது. அவர் இல்லாமல் இருக்கும் போதும் தமிழகத்தில் பாஜ நல்ல அளவுக்கு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எந்த ஒரு தனிநபரை சார்ந்தும், அல்லது ஒரு குடும்பத்தை சார்ந்தும் பாஜ இல்லை. எனவே தமிழிசை இல்லாததால் பாஜ வளராது என்பது சரியானது அல்ல.பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் ‘‘கோ பேக் மோடி’’ என்று சிலர் டிரெண்ட் செய்கின்றனர். அதை தமிழர்கள் யாரும் செய்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார். 


Tags : Baja ,Vanathi Srinivasan Baja ,Vanathi Srinivasan , Baja , Tamil,Vanathi Srinivasan
× RELATED பாஜ, விசிகவினர் போட்டிபோட்டு...