பாளையில் பூத் கமிட்டி கூட்டம் எடப்பாடிக்குள் புகுந்த ஜெயலலிதா ஆன்மா: அமைச்சர் உதயகுமார் திடுக் பேச்சு

நெல்லை:  ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமியின் மேல் புகுந்துள்ளதால்தான் அவரைப்போல அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதி முழுவதும் அமைச்சர்கள் வலம் வந்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகளுக்கு பாளை. கேடிசி நகர்  பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கீழநத்தம், அரியகுளம் ஊராட்சிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம், கேடிசி நகர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இலவச சைக்கிள் போன்ற நலத்திட்டங்களை தொடர முடியுமா என அனைவரும் கேள்வி எழுப்பினர். ஆனால் ஜெயலலிதாவின் வேகம், ஆற்றல் என்று எல்லோரும் பேசும் வகையில் செய்து காட்டியவர்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமி மேல் புகுந்ததால் ஜெயலலிதாவை போல அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Udayakumar Jayalalithaa ,meeting ,Booth Committee ,booth committee meeting , Jayalalithaa's soul enters the Booth Committee meetingJayalalithaa's soul enters the Booth Committee meeting
× RELATED குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார்...