×

இந்தோனேசியாவில் நடந்த உடற்கட்டமைப்பு போட்டியில் பரிசுகளை அள்ளிய வீரர்கள்

கடந்த மாதம் 28ம் தேதி இந்தோனேசியாவில் நடந்த ஆசிய அளவிலான 53வது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடற் கட்டமைப்பு போட்டியில் கலந்து கொள்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து மொத்தம் 21 பேர் தேர்வாகினர். அதில்  சென்னையிலிருந்து மட்டும் 11 பேர் இந்தோனேசியா சென்றனர்.இந்த போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் 70 கிலோ எடை பிரிவில் ஒரு தங்க பதக்கம், 75 கிலோ எடைப்பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம், 85 கிலோ எடைப்பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றனர். 55 கிலோ எடை பிரிவில் 5வது  இடமும் 70 கிலோவுக்கு குறைந்த எடை ஜூனியர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், மாற்றுத்திறனாளிகளுக்கான உடல் கட்டமைப்பு போட்டியில் நான்காவது இடமும், பெண்கள் பிரிவில் 5வது இடம் என மொத்தம் 9 பதக்கங்கள் பெற்று சென்னை  திரும்பினர்.

சென்னை திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் அர்ஜுனா விருது பெற்றவரும் தமிழக ஆணழகன் சங்கத்தின் செயலாளருமான பாஸ்கரன், அரசு அதிகாரிகள் மற்றும் பெற்றோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, பேசிய மாற்றுத்திறனாளி வீரர் சுரேஷ், ‘‘இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றது எனக்கு பெருமையாக இருக்கிறது. எங்களை போன்ற வீரர்களை தமிழக அரசு ஊக்குவித்து அடுத்து நடக்கவிருக்கும் உலக அளவிலான  ஆணழகன் போட்டியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் உதவி தொகை வழங்க வேண்டும்’’ என்றார்.

வீராங்கனை சுஜாதா கூறுகையில், ‘‘எனக்கு கல்லூரி படிக்கும் வயதில் மகன், மகன்கள் உள்ளனர். இருப்பினும் என்னால் சாதிக்க முடிந்த நிலையில் மற்ற பெண்களும் இது போன்ற போட்டியில் நுழைய வேண்டும்’’ என்றார். மேலும் தமிழக  அரசு இப்போட்டியில் பெண்களையும் ஊக்குவித்து அனைத்து போட்டியாளர்களுக்கும் உதவிட வேண்டும் என்றும், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



Tags : Winners ,Indonesia ,Bodybuilding Competition ,Winners of Prizes , Winners of prizes in the Bodybuilding Competition in Indonesia
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை