×

நீர் மேலாண்மை குறித்து அறிய அதிகாரிகள் குஜராத் பயணம்: 7 நாட்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கின்றனர்

சென்னை: நீர் மேலாண்மை குறித்து அறிய தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குஜராத் மாநிலத்துக்கு செல்கின்றனர். அவர்கள் 7 நாட்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கின்றனர்.  கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்த நிலையில், அணைகள் முழு கொள்ளவை எட்டியது. ஆனால், இந்த தண்ணீரை கொண்டு வேளாண்மை மற்றும் குடிநீர் உட்பட இதர தேவைகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.  இதனால், அணைகளின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில் அணைகளின் நீர் மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. இதனால், கடந்த ஜனவரி முதல் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு தண்ணீர் திறக்க  முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கு, நீர் மேலாண்மையில் போதிய அளவு அனுபவம் இல்லாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து அணைகளில் தண்ணீர் பயன்பாடு தொடர்பாக வரைவு அறிக்கை தயார் செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில்,  வரைவு அறிக்கை தயாரிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில், குடிநீருக்கு தினசரி விநியோகம், பாசன தேவைக்கான விநியோகம் உள்ளிட்டவை குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து நீர் மேலாண்மை குறித்து அறிந்து கொள்ள முதன்மை தலைமை பொறியாளர் அலுவலக உதவி செயற்பொறியாளர்கள் சுகந்தி, ராஜேந்திர பிரசாத், திட்ட வடிவமைப்பு செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி  செயற்பொறியாளர் சந்திரசேகரன் உட்பட 21 பேர் கொண்ட குழுவினர் குஜராத் செல்கின்றனர். அவர்களுக்கு குஜராத்தில் உள்ள நீர் வளத்துறை பொறியாளர்கள் நீர் மேலாண்மை பயிற்சி வகுப்பு அளிக்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள சர்தார்  சரோவர் அணை உட்பட அணைகள், ஏரிகளிலும் பார்வையிடுகின்றனர். அக்டோபர் 14ம் தேதி 20ம் தேதி வரை குஜராத் மாநிலங்களில் தங்கி இருந்து நீர் மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர் மேலாண்மை தொடர்பாக குஜராத் செல்வதன் மூலம் தமிழகம் நீர் மேலாண்மையில் பின் தங்கியிருப்பது இதன் மூலம் தெரிகிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Gujarat ,workshop , Officials visit Gujarat: 7 days workshop on water management
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...