×

திருநங்கையாக மாறிய இன்ஜினியரை காதலித்து கரம் பிடித்த எலக்ட்ரீசியன்: பாதுகாப்பு கேட்டு மகளிர் போலீசில் தஞ்சம்

சேலம்: சேலத்தில் திருநங்கையாக மாறிய இன்ஜினியரிங் பட்டதாரியை, எலக்ட்ரீசியன் காதல் திருமணம் செய்தார். இருவரும் பாதுகாப்பு கேட்டு மகளிர் போலீசாரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (27). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் படித்துள்ளார். பின்னர், இவர் திருநங்கையாக மாறி தனது பெயரை பூமிகா என்று மாற்றி வைத்துக் கொண் டார். இதையடுத்து வீட்டில் இருந்து பிரிந்து தனியாக, நெல்லைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு வீடு எடுத்து தங்கி அங்குள்ள நகை கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அதே கடையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அருண்குமாருக்கும் (27), பூமிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

 இதையறிந்த அருண்குமாரின் பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த 5 மாதத்துக்கு முன்பு இருவரும் நெல்லையில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு, சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
 இந்நிலையில், அருண்குமாரின் பெற்றோர், அருண்குமாரிடம் பூமிகாவை விட்டு வரும் வரும்படி தெரிவித்துள்ளனர். இதனால், நேற்று இன்ஜினியரிங் பட்ட தாரியான திருநங்கை பூமிகா, பாதுகாப்பு கேட்டு சேலம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில், திருநங்கை பூமிகா மற்றும் எலக்ட்ரீசியனின் பெற்றோர்களிடம் செல்போனில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இரு வீட்டாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர மறுத்து விட்டனர். இதையடுத்து திருமணம் செய்த எலக்ட்ரீசியனுடன் திருநங்கை பூமிகாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.


Tags : Electrician ,engineer ,Asylum at Women Police , Transgender, Engineer, love, Women Police ,protection
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...