×

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இரு இன்னிங்சிலும் சதமடித்து ரோகித் சர்மா சாதனை

விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் துவக்க வீரர்களாக களமிறங்கிய  ரோகித் சர்மா 176 ரன்னும், மயங்க் அகர்வால் 215 ரன்னும் அடித்து அசத்தினர்.
 
அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா எல்கர், டி காக், டு பிளசிஸின் பொறுப்பான ஆட்டத்தால் 431 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் 7 விக்கெட் எடுத்து அசத்தினார்.
இதையடுத்து, 71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, அகர்வால் களமிறங்கினர். அகர்வால் 7 ரன்கள் அடித்து விரைவில் வெளியேறினார்.


alignment=புஜாரா  81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அசத்திய ரோகித் சர்மா இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்து 127 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், 67 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார்.


alignment=395 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 11 ரன்களை எடுத்துள்ளது. எல்கர் 2 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.கடைசி மற்றும் 5ம் நாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 384 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்சிலும் சதமடித்து சாதனை செய்துள்ள ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Rohit Sharma ,opener ,Test innings ,Scoring 2Centuries ,Rohith Sharma Creates a History , Rohith Sharma, INDvsSA,Opener, India, South Africa
× RELATED ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி.20...