×

69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தஞ்சை அழகர் மற்றும் திரிபுராந்தகர் சிலைகள் மீட்பு!

தஞ்சை: 69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தஞ்சை அழகர் மற்றும் திரிபுராந்தகர் சிலைகள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. ராஜராஜ சோழன் சிலையுடன் காணாமல் போன 61 சிலைகளை மீட்கும் நடவடிக்கயைில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து 69 ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போனதாக கூறப்படும் தஞ்சை அழகர் மற்றும் திரிபுராந்தகர் சிலைகள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் இருப்பதாக இந்த குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், 56 கிலோ எடை கொண்ட திரிபுராந்தகர் சிலையையும், 61 கிலோ எடை கொண்ட தஞ்சை அழகர் சிலையையும் மீ்ட்டனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல், நீதிமன்றத்தில் சிலைகள் ஒப்படைக்கப்பட்டு சொந்தமான கோவிலில் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், மீட்கப்பட்டுள்ள 2 சிலைகளும் முன்னதாக ராஜகோபாலசுவாமி கோவிலிலும் அதன் பின்னர் தஞ்சை தேவஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னரே கலைக்கூடத்துக்கு கொண்டுவரப்பட்டதாகவும் பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.



Tags : Tanjore ,Tripuranthangar ,Tanjore Azhagar , Thanjavur, Azhagar, tiripurantakar, statues, ponmanikkavel
× RELATED தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு...