×

மத்திய அரசை ஆழமாக விமர்சித்த ஒரே காரணத்திற்காக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்: கார்த்திக் சிதம்பரம் பேட்டி

மதுரை: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கி 2 மாத ஆகியுள்ள நிலையில் 3 முன்னாள் முதல்வர்கள் வீட்டு சிறையில் உள்ளனர் என கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை எம்.பி.கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீரில் பள்ளி, கல்லூரி மற்றும் தோலைபேசி போன்றவை செயல்படவில்லை என தெரிவித்தார். எதிர்ப்பாளர்களை சிறையில் அடைப்பது காஷ்மீரில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடைபெறுவதாக தெரிவித்தார். ப.சிதம்பரம், சிவகுமார், சசிதரூர், சரத்பவார் போன்ற தலைவர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார். மத்திய அரசை ஆழமாக விமர்சித்த ஒரே காரணத்திற்காக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என அவர் குற்றம் சாட்டினார்.

Tags : P. Chidambaram ,government ,interview ,Kartik Chidambaram , P. Chidambaram, Arrested, Karthik Chidambaram
× RELATED மத்திய அரசு செயலிழந்து நிற்கிறது: ப.சிதம்பரம் ட்விட்