வைகை அணையில் இருந்து அக்.9ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: வைகை அணையில் இருந்து அக்.9ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பெரியாறு பாசன பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் 1 ,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Palanisamy ,Vaigai Dam , Vaigai Dam, Water Resources, Chief Minister Palanisamy
× RELATED வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்