×

மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக கும்பகோணம் பஸ் நிலையத்தில் 4 சாய்வுதள படிக்கட்டுகள்

கும்பகோணம் : மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக கும்பகோணம் பஸ் நிலையத்தில் 4 சாய்வுதள படிக்கட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் தினந்தோறும் 100 க்கும் மேற்பட்ட பஸ்சுகள் வந்து செல்கின்றன. கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நவக்கிரக கோயில்கள், புராதன கோயில்கள், வரலாற்று சின்னங்கள், உலக புகழ்பெற்ற கோயில்கள் உள்ளது. இதனால் கும்பகோணம் பகுதிக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இதேபோல் நாகை, திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், தஞ்சை பகுதியில் இருந்து சென்னை, திருப்பதி, ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு பஸ்சுகள் சென்று வருவதால், வெளிமாநிலத்தவரின் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் கோவை, திருப்பூர், மதுரை, சேலம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு கும்பகோணம் பகுதிகளில் தயாரிக்கும் பித்தளை, சில்வர் பாத்திரங்கள், பித்தளை குத்துவிளக்குகள், சேலைகள், வெற்றிலை, காய்கறிகள், வாழை இலைகள் தினம்தோறும் பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வருகின்றனர். இதனால் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் 24 மணி நேரமும் பரபரப்புடன் இயங்கி வருகிறது.

தினம்தோறும் 500க்கும் மேற்பட்ட பஸ்சுகள் வந்து செல்லும் நிலையில் மாற்றுத்திறனாளிகள் பஸ்சுகளில் ஏறி இறங்குவதற்கு போதுமான படிக்கட்டு வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது புதிதாக விடப்பட்ட பேருந்து படிக்கட்டுகளில் சாதாரண பயணிகளே ஏறி இறங்க சிரமப்படும் நிலையில் மாற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.இதனால் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புதிய பஸ்சுகளின் படிக்கட்டுக்களில் ஏறி இறங்க சிரமமாக இருக்கிறது என்பதால் சாய்வுதள படிக்கட்டுகள் அமைக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கும்பகோணம் நகராட்சி நிர்வாகத்தின்கீழ் சாய்வு தள படிக்கட்டுகள் வைக்க வேண்டுமென கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உத்தரவிட்டது.

இதைடுத்து இரும்பினாலான நான்கு சாய்வுதள படிக்கட்டுகள் தயாரிக்கப்பட்டு தஞ்சை மார்க்கமாக செல்லும் பஸ் நிறுத்துமிடம், சென்னை மார்க்கமாக செல்லும் பஸ் நிற்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி அலுவலர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்காக நகராட்சி நிர்வாகத்தின்கீழ் இரும்பினாலான 4 சாய்வுதள படிக்கட்டுகள் தயாரிக்கப்பட்டு தஞ்சை மற்றும் சென்னை மார்க்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி பணியாளர்கள் பராமரிப்பர். பஸ் வந்து நின்றவுடன் மாற்றுத்திறனாளிகள் இறங்கினாலோ அல்லது ஏறினாலோ சாய்வுதள படிக்கட்டுக்களை நகர்த்தி வந்து பஸ் படிக்கட்டுக்கு அருகில் வைக்கப்படும். பின்னர் மாற்றுத்திறனாளிகள் இறங்கி ஏறியவுடன் சாய்வுதள படிக்கட்டு ஓரமாக வைக்கப்படும் என்றார்.


Tags : bus station ,Kumbakonam ,Persons , Slash stairs,kumbakonam ,Disabled persons
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்