×

மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 திரைப்பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதற்கு அரசியல் கடசி தலைவர்கன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினருக்கு ஆதரவாக மோடிக்கு கடிதம் எழுதியது தேசத்துரோக குற்றமா? என்றும், ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா அல்லது சர்வாதிகார நாட்டில் வாழ்கிறோமா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளை காப்பாற்றிட, 49 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக நாட்டில் கருத்துரிமையை பறிப்பதும் மாற்று கருத்து கூறுவோரை தேசத்துரோகிகளாக சித்தரிப்பதும் பாசிசத்தின் அடையாளம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இத்தகைய போக்கை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு கைவிட வேண்டும் என்றும், வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஆதாரத்துடன் பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக தேசத்துரோக குற்றம் சுமத்தி வழக்குப்பதிவு செய்திருப்பது எந்தவொரு ஆட்சியிலும் நடக்காத செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விகாரத்தில் அபாயகரமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், மணிரத்னம் உள்ளிட்ட 49 மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


Tags : celebrities ,leaders ,MK Stalin ,Mani Ratnam , Mani Ratnam, Treason case, MK Stalin, Vaiko, Mutharasan, condemnation
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...