×

பாதாள சாக்கடையில் அடைப்பை அகற்றுவதற்கு ரோபோ இயந்திரம்

தஞ்சை : பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பை அகற்ற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் தஞ்சை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட பண்டிக்கூட் எனும் ரோபோவை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் தஞ்சை மாநகராட்சி பகுதி பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பை அகற்ற ரூ.48.40 லட்சம் மதிப்பில் பண்டிக்கூட் எனப்படும் ரோபோ இயந்திர கருவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் துப்புரவு பணியாளர்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்புகளை சரி செய்வது தவிர்க்கப்படும். விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாது. இது தஞ்சை மாநகராட்சியில் ஒரு புதிய சாதனையாகும். பண்டிக்கூட் ரோபோ பயன்பாட்டின் மூலம் தஞ்சை மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு பெற்றுள்ள 23,653 குடும்பத்தினர் பயன்பெறுவர் என்றார். தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிர்வாக இயக்குனர் அனுராக் ஷர்மா, மாநகராட்சி அலுவலர்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : tanjore , Robot ,tanjore,ground drainage system
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...