×

வேலையின்மை, ஊழலை கண்டித்து ஈராக்கில் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் : போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 60 பேர் உயிரிழப்பு; 1600 பேர் படுகாயம்

பாக்தாத் : ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வெடித்திற்கும் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. ஈராக்கில் வேலையின்மை, அதிகரித்து வரும் ஊழல் போன்ற பிரச்சனைகளை கண்டித்து அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 4 நாட்களாக அங்கு கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது. தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது.போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியதில் 1600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதே வேளையில், மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க அரசு உடனடியாக ஐ.நா. கண்காணிப்பின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்று அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே அங்குள்ள மக்கள்,போலீசார் தலையை குறிவைத்து துப்பாக்கியால் சுடுகின்றனர். எந்த நாட்டு அரசாவது தன் நாட்டு மக்களுக்கு எதிராக துப்பாக்கியை பயன்படுத்துமா ?ஆனால் ஈராக் அரசு தன்  நாட்டு மக்கள் மீது நவீன துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.


Tags : state government ,Iraq ,police firing , Iraq, violence, deaths, police, shootings, unemployment, corruption, guns
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...