×

பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் சவூதி அரேபியாவுக்கு பயணம் என தகவல்

டெல்லி: பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட சவூதியின் முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரியாதில் நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து, பிரதமர் மோடியின் சவூதி பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்ற போதும், அண்மையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலில் சவுதி பயணத்தை சார்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை அஜித் தோவல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததோடு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து விளக்கினார். ஏற்கனவே 2016ம் ஆண்டு பிரதமர் மோடி சவூதி அரேபியா சென்றார். அப்போது அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான அப்துல் அஜீஸ் சவுத்  விருது வழங்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் சவூதி அரேபியா 100 மில்லியன் டாலர் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையிலும், சவூதி எண்ணெய் நிறுவனமான அராம்கோ இந்திய நிறுவனங்களுடன் கூட்டு வர்த்தகம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையிலும், பிரதமர் மோடியின் சவூதி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.


Tags : Modi ,Saudi Arabia , PM Modi, Month End, Saudi Arabia, Travel, Info
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...