×

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் துணை ஆணையர் அலுவலகம் வெளியே தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல்: 8 பேர் காயம்!

அனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் துணை ஆணையர் அலுவலகம் வெளியே தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 55 கி.மீ தொலைவில் அனந்த்நாக் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலகம் வெளியே இன்று காலை 11 மணியளவில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மிகவும் பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் சுமார் ஒரு போக்குவரத்து போலீசார் உள்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து பேசிய அதிகாரி ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகள் மீதே கையெறி குண்டு வீசப்பட்டதாகவும், ஆனால், தீவிரவாதிகளின் இலக்கு தவறுதலாகி அந்த குண்டு சாலையில் விழுந்து வெடித்தாகவும் கூறியுள்ளார். இதனால் சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இத்தாக்குதலில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தீவிரவாத தாக்குதலை அடுத்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், தீவிரவாதிகளை தேடும் பணிகளும் முடக்கி விடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் இருந்தே காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளால் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படையினர் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Terrorists ,Kashmir ,deputy commissioner ,Anantnag ,office ,Jammu , Jammu and Kashmir, Anantnag, militants, grenades, attack
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...