சென்னை அமைந்தகரையில் ஏ.டி.எம் மோசடியில் ஈடுபட்ட அரியானாவை சேர்ந்த இருவர் கைது

சென்னை: சென்னை அமைந்தகரையில் நூதன முறையில் ஏ.டி.எம் மோசடியில் ஈடுபட்ட அரியானாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட அரியானாவை சேர்ந்த அப்சல் மற்றும் ஜாகிரை கைது செய்த போலீஸ் 10 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தது. பணம் எடுக்கும் போது ஏடிஎம் இயந்திரம் பழுதாகிவிட்டது எனக்கூறி சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்துள்ளனர். கைதான இருவரும் கடந்த வாரம் ராஜஸ்தானில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Related Stories: